ஒரு பிரபல நடிகை கொலை செய்யப்பட, அவள் காதலன்
தன் உயிருக்குப் பயந்து தலைமறைவாகிறான். அது தற்கொலை என்று
காட்ட போலீசாரும், ஆளும் கட்சியினரும் முயல, அதில் சந்தேகப்படும்
ஒரு நிருபர் துப்புத் துலக்க முனைப்பு காட்டுகிறான். மறைந்த
ஒரு அரசியல் பெருந்தலைவரின் பேரனான அந்த நிருபர் அந்தத் துப்பறியும் வேலையோடு, தங்கள்
குடும்பத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் அறிய முயல, அவனும்
அரசியலுக்கு இழுக்கப்படுகிறான். பின் நடிகையின் தலைமறைவான காதலனும் கொல்லப்பட, அவன் இறப்பதற்கு
முன் கொலையாளியாக யாரும் எதிர்பாராத ஒரு பெரும் புள்ளியைக் குற்றம் சாட்டி எழுதிய கடிதமும், வீடியோவும்
வைரல் ஆகிறது. வழக்கும் பரபரப்பாக நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த நிருபரையும் கொல்ல முயற்சி நடக்கிறது. பின் என்னவெல்லாம்
ஆகின்றன, அரசியல் சதுரங்கத்தில் எப்படியெல்லாம் காய்கள் தந்திரமாக
நகர்த்தப்படுகின்றன என்பதை கடைசி வரை பரபரப்புடனும், விறுவிறுப்பு
விலகாமலும் சொல்லி, சிந்திக்கவும் வைக்கும் நாவல் இது.
அமேசானில் வாங்க லிங்க்: