யோகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

யோகி நாவல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!


 என்.கணேசனின் யோகி நாவல் குறுகிய காலத்தில் முதல் பதிப்பு நூல்கள் விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு இன்று  வெளியாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாம் பதிப்பின் விலை ரூ.820/-

பேராதரவு தந்து அதை வெற்றி நூலாக்கிய வாசகர்களுக்கு எங்கள் நன்றிகள்.



புதன், 2 ஆகஸ்ட், 2023

இன்று தினமலரில் யோகி மற்றும் கீதைக்கு வந்திருக்கும் விமர்சனங்கள்!

 இன்று 3.8.2023 தினமலர் (மதுரை) பதிப்பில் எழுத்தாளர் என்.கணேசனின் யோகி நாவலுக்கும், கீதை காட்டும் பாதை நூலுக்கும் விமர்சனங்கள் வந்துள்ளன.



நன்றி: தினமலர் (மதுரை) 

சனி, 3 ஜூன், 2023

புதன், 17 மே, 2023

என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” வெளியீடு!


 

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” இன்று வெளியாகிறது.  என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்ட இந்த நாவல் 716 பக்கங்கள் கொண்டது.  

இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2025ல் வெளியாகியுள்ளது. விலை ரூ.820


கதைச் சுருக்கம்:

யோகாலயம் எனப்படும் பிரபல ஆசிரமத்தில் உள்ள ஒரு பெண் துறவியின் உயிருக்கு ஆபத்து என்று அப்பெண்ணின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் வர, அதிர்ச்சியுடன் அவளைக் காணச்செல்லும் அவளது தந்தைக்கு, ஆசிரம விதிகளைக் காரணம் காட்டி, காண அனுமதி மறுக்கப்படுவதில் ஆரம்பிக்கிறது நாவலின் கதைக்களம்.  பின்பு அடுத்தடுத்து நிகழும் கொலைகளுக்கும் காரணமோ, கொலையாளிகளோ கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க திறமை வாய்ந்த துப்பறியும் அதிகாரி ரகசியமாய் அங்கே துறவியாகப் போய்ச் சேர்கிறான். குற்றவாளிகளை மட்டுமல்லாமல் ஒரு உண்மையான யோகியையும் தேடும் தேடலும் தொடர்கிறது. மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆவிகளுடன் தொடர்பு, ஏவல் சக்தி, செய்வினை, போன்ற அமானுஷ்யங்களும் பிணைந்து, நட்பு, காதல், கர்மா, உண்மையான ஆன்மீகம் ஆகியவையும் அடையாளம் காட்டப்படுவது இந்த நாவலின் தனிச்சிறப்பு.

விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)

Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)

வங்கிக் கணக்கு : N.Ganeshan Books

                                  DBS (Former LVB)  Kovaipudur Branch

                                  IFSC Code DBSS0IN0188

                                  A/c No.0188386000001146

 தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நாவலை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விலாசத்தை அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். பணத்தை அனுப்பி வைத்தால் நாவல் அனுப்பி வைக்கப்படும்.

அமேசானில் ஆன்லைனிலும் இந்த  நாவலை வாங்கலாம். லிங்க்



சனி, 29 ஏப்ரல், 2023

விரைவில் 2 நாவல்களும் கீதையும் வெளியீடு!

என்.கணேசன் எழுதியிருக்கும் இரண்டு புதிய நாவல்கள் பத்து தினங்களில் வெளியாகவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


முதல் நாவல் பெரிய நாவல் யோகி. இது ஒரு ஆன்மீக த்ரில்லர். 


இரண்டாவது நாவல் மாயப்பொன்மான். இது ஒரு சிறிய நாவல். அவரது வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசப்படும் ஒரு காதல் கதை! 


இதனுடன்இது வரை மின்னூலாக மட்டுமே இருக்கும், கீதை காட்டும் பாதை நூலும் அச்சு நூலாகவும் வெளியாகவுள்ளது. 




நூல்கள் வெளியானவுடன் மற்ற எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறோம். 


இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத  சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும்,  யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை.  17.05.2023 அன்று கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV