எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவலான ச(க்)தி நமது பதிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 648 பக்க இந்த நாவலின் விலை ₹780/-
கதைக்களம்
சித்தர்களாலும், மன்னர்களாலும், நாகங்களாலும்
மாறி மாறி வழிபடப்பட்ட சக்தி வாய்ந்த மிகப் பழமையான பகவதி சிலை கொச்சி ராஜா சக்தன்
தம்புரானால் திருச்சூருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வரவழைக்கப்படுகிறது. வரும் வழியில்
ஒரு ஜமீன் பூமியில் இறங்கி விட்ட பகவதி சிலையப் பின் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதே சமயத்தில்
சக்தன் தம்புரானும் இறந்து விட ஜமீன்தார் அதற்கு அங்கேயே கோயில் கட்டுகிறார். பகவதியின்
சக்திகளுக்காக சிலை கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் கொள்ளையர்களுக்கும்
சிக்காமல் பெருமழையால் பகவதி சிலை மண்ணில் புதைகிறது. ஜமீன் குடும்பத்தின்
தற்போதைய வாரிசு அதை மண்ணிலிருந்து மேலே எடுத்து கோயில் கட்ட முனைகிறார். பகவதி சிலையோடு
முன்பிருந்தே இருந்த வெள்ளிப் பேழையில் ஒரு சேர மன்னன் எழுதிய பழைய ஓலையும் அவருக்குக்
கிடைக்கிறது. அதில் பகவதி சிலை குறித்த குறிப்புகள் இருப்பது அறிந்து ஆராயப்
போகும் போது, ஆராயும் மனிதர் கொல்லப்பட்டு வெள்ளிப்பேழை களவு போகிறது. அதன் பின்
என்ன நடக்கின்றது, பகவதி கோயில் கட்டப்படுகிறதா, பகவதியின்
சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள நடக்கும் சதிகளுக்கு பகவதி உடன்படுகிறாளா என்பதை எல்லாம்
அறிய இந்த நாவலைப் படியுங்கள். குடும்பம், நட்பு, காதல், ஆன்மீகம், யோக சக்தி, அமானுஷ்யம், சூழ்ச்சிகள், துப்பறிதல் என்ற பல இழைகளால் பின்னப்பட்ட இந்த நாவல் உங்களை
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும்!
இந்த நாவலை பதிப்பாளரிடமிருந்து வாங்க பதிப்பாளரை 9486309351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-
https://www.amazon.in/dp/8197192065


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக