ஞாயிறு, 16 நவம்பர், 2025

என்.கணேசனின் புதிய நாவல் “வியூகம்” வெளியீடு!


 

அன்பு வாசகர்களே!

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவலான “வியூகம்” இன்று மாலையில் வெளியாகவிருக்கிறது. 

கதைக்களம்

வருமானவரித் துறையின் திடீர் சோதனை வருகிறது என்று செய்தி கிடைத்தவுடன், அவசரமாக கண்டெய்னர் லாரியில் இடம் மாற்றப்படும் 510 கோடி ரூபாய் கடத்தப்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொல்லப்படுகிறார். அவர் முன்பு ஒரு விசாரணையில் தவறாகத் தீர்ப்பு தந்து ஒரு நேர்மையான அதிகாரியைத் தண்டித்தவர் என்பது வெளியாகிறது. மிகவும் பாதுகாப்புடன் ஒரு மர்ம வீட்டில் பதுக்கப்பட்டிருக்கும் தங்கம், வைரம், பணம் கடத்தப்பட முயற்சி நடக்கிறது. உண்மை அறிய சிலரும், உண்மையை மறைக்க சிலரும் முயல, தீவிரமாகவும் தந்திரமாகவும் பல வேலைகள் நடக்கின்றன. இந்த சம்பவங்களின் பின்னணியில் திட்டமிடுவதும், அசாத்தியத் துணிச்சலுடன் அனைத்தையும் செயல்படுத்துவதும் ஒரு தனிமனிதன்! நீதிக்காக அதிகார வர்க்கத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கத் துணிந்திருக்கும் அவனுடைய திட்டம் வெற்றி பெறுமா? விடை அறிய, குடும்பம், பாசம், நட்பு, காதல், அரசியல், நவீன தொழில் நுட்பம், கொலை, கொள்ளை, சாகசம் அனைத்தும் கலந்த, பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த நாவலைப் படியுங்கள்!

 


610 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.720/-

இந்த நாவலை பதிப்பாளரிடமிருந்து வாங்க பதிப்பாளரை 9486309351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக