ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஏப்ரல், 2023

விரைவில் 2 நாவல்களும் கீதையும் வெளியீடு!

என்.கணேசன் எழுதியிருக்கும் இரண்டு புதிய நாவல்கள் பத்து தினங்களில் வெளியாகவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


முதல் நாவல் பெரிய நாவல் யோகி. இது ஒரு ஆன்மீக த்ரில்லர். 


இரண்டாவது நாவல் மாயப்பொன்மான். இது ஒரு சிறிய நாவல். அவரது வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசப்படும் ஒரு காதல் கதை! 


இதனுடன்இது வரை மின்னூலாக மட்டுமே இருக்கும், கீதை காட்டும் பாதை நூலும் அச்சு நூலாகவும் வெளியாகவுள்ளது. 




நூல்கள் வெளியானவுடன் மற்ற எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறோம். 


இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத  சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும்,  யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை.  17.05.2023 அன்று கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

பிரசாதம் நூலுக்கு தினத்தந்தி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மதிப்புரை!

 இன்றைய தினத்தந்தி (12.02.2023)யில் என்.கணேசனின் பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்) நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது.



ஜனவரி 2023 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பிரசாதம் நூலுக்கும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் நூலுக்கும் மதிப்புரைகள் வந்துள்ளன.

நன்றி: தினத்தந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!


 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

என்.கணேசன் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது. 

பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. 

தோல்வி என்பது இடைவேளை -  தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.

என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/- 

அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும்,  புற வாழ்க்கையில் வெற்றியும்,  முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.


இந்த நூலையும் அச்சில் உள்ள என் கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

வெள்ளி, 21 ஜனவரி, 2022

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்!

 


தினத்தந்தியில் என்.கணேசன் எழுதி வந்த ஆன்மீகத் தொடரான ”ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்” அச்சு நூலாக ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியாகியிருக்கின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு அமானுஷ்ய ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் நூல் இது. அந்தச் சம்பவங்கள் அனைத்தும் நம்மைப் பிரமிக்க வைப்பவையாக இருக்கின்றன
அருவமாகவும்உருவமாகவும் வாழும் மகாத்மாக்கள்

அவர்கள் தொடர்பு கொள்ளும் மனிதர்கள்

அவர்கள் அனுப்பும் இரகசியச் செல்வம்

ஏவல் சக்திகள்

ஒன்றைப் பலதாக்கும் அபூர்வசக்தி

இறந்தவரின் இல்லாத புகைப்படத்தைத் தருவித்தல்

அந்தரத்திலிருந்து வரவழைக்க முடிந்த புனித நூல்கள் மற்றும் அபூர்வ மலர்கள்

மலருக்குள் இருந்த மோதிரம்

அமானுஷ்ய முறையில் எழுதப்பட்ட அற்புத நூல்

சூட்சும சரீர அற்புதங்கள்

திரும்பிச் செல்ல முடியாத மர்ம மாளிகை

அமானுஷ்ய மணி ஓசை

நோய் தீர்க்கும் மகாசக்திகள் 

போன்ற அபூர்வ சம்பவங்களை மிகவும் சுவாரசியத்துடன் சொல்கிறது இந்த நூல்ஆத்மசக்திகளின் அற்புதங்களை அறிந்து பிரமிக்கவும்மெய்ஞானத்தை ஆழமாக உணர்ந்து தெளியவும் இந்த அரிய நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள். 

நூலின் விலை ரூ.170/-

                 

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                                   



 

 


ஞாயிறு, 16 ஜனவரி, 2022

அமானுஷ்ய ஆன்மிகம்

 


என்.கணேசன் தினத்தந்தியில் வாரா வாரம் எழுதி வந்த  அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் பிப்ரவரி 2018ல் நூலாக வெளியிட்டிருந்தது. அதன் இரண்டாம் பதிப்பு என்.கணேசன் புக்ஸால் செப்டம்பர் 2023ல் வெளியிடப்பட்டுள்ளது. 174 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை ரூ.200/-

இந்த நூல் குறித்து என்.கணேசன் கூறுவதாவது:

அமானுஷ்ய சக்திகளும், ஆன்மிகமும் பண்டைய காலத்திலேயே பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. தங்களுக்கு மீறிய சக்திகளை எல்லாம் இறைசக்தியாகவே பார்த்து, இறைவன் தந்ததாகவே பாவித்து அமானுஷ்ய சக்திகளை ஆன்மிகத்தின் ஒரு முக்கிய பாகமாகவே அக்காலத்தில் இருந்தே மனிதர்கள் கருதி வந்தார்கள். ஆபத்துக் காலங்களில் தங்களைக் காப்பாற்றவும், தேவையான சமயங்களில் தங்களை வழிநடத்தவும், இறைவழிபாடு நடத்தி அந்தச் சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள். உலகின் பல பகுதிகளிலும் பெயர்கள், முறைகள், வழிகள் வேறுபட்டாலும் ஆன்மிகமும், அமானுஷ்ய சக்திகளும் அவற்றின் அடிப்படை அம்சங்களாக இருந்தன. இந்த அமானுஷ்ய ஆன்மிகம் நூல் அவற்றில் மூன்று ஆன்மிக வழிமுறைகளையே விரிவாக விளக்குகின்றது.

இந்த நூலில் விளக்கப்படும் வூடூ, அகோரி, ஷாமனிஸம் என்ற மூன்றைக் குறித்தும் தமிழில் சிறு கட்டுரைக் குறிப்புகள் இருக்கலாமே ஒழிய, விரிவாக இது வரை எழுதப்பட்டதில்லை.  இவை பொருள் பொதிந்தவை, மிக சுவாரசியமானவை, இந்த வழிமுறைகளில் சிந்திக்க வைக்கும்  மெய்ஞானமும், வாழ்க்கைக்கு உதவும் அம்சங்களும், உளவியல் ரீதியான உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. ”

வூடூ, அகோரிகள், ஷாமன்கள் பற்றிய விரிவாய் அறிந்து கொள்ள உதவும் இந்த நூல் தினத்தந்தியில் தொடராக வெளிவந்த போது பல தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்றது. இந்த அரிய கட்டுரைகளை ஆன்மிகத்திலும் அமானுஷ்ய சக்திகளிலும் ஈடுபாடுள்ள அனைவரும் பல சுவாரசியத் தகவல்கள், விளக்கங்களுடன் விரும்பிப் படிக்கலாம்.

புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K



புதன், 12 ஜனவரி, 2022

கீதை காட்டும் பாதை!



"ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.

அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும் பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்பு பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது."


என்று ஆரம்பித்து பகவத் கீதையைச் சிறப்பான விளக்கங்களுடன் இந்த நூலில் என்.கணேசன் விவரித்து உள்ளார். 
ஒவ்வொரு மனிதனும் தன்னை அறியவும், அமைதியாக இவ்வுலகில் வாழவும், வெற்றி அடையவும் இந்த அருமையான நூலைப் படிக்க வேண்டும்.

இந்த நூல்  அச்சு நூலாக மே 2023ல் வெளியாகியுள்ளது.  296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/-

அமேசானில் ஆன்லைனில் வாங்க லிங்க்

அமேசான் கிண்டிலிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 
இதனைப் படிக்க அமேசான் கிண்டிலில் லிங்க் -


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.     


கீதை காட்டும் பாதையை என்.கணேசன் யூட்யூபிலும் வாராவாரம் விளக்கி வருகிறார். கேட்க விரும்புபவர்கள் அதையும் கேட்டு பயன்பெறலாம். லிங்க்-


 

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அறிவார்ந்த ஆன்மீகம்!

 


ம் ஆன்மிகச் செயல்கள் சம்பிரதாயமாகவும், எந்திரத்தனமான சடங்குகளாகவும் மாறி விட்டிருக்கின்றன. நம் முன்னோர் நம்மிடம் விட்டுப் போயிருக்கும் எத்தனையோ பேரறிவுக் களஞ்சியங்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு எட்டவே இல்லை. இதற்குக் காரணம் அறியாமை. ஒரு காலத்தில் புரிந்து செய்தது பின் வந்த காலங்களில் புரியாத சடங்குகளாகவும், கட்டாயமாகவும் மாறி விட்டது. ஏன் என்ற கேள்வி எழுப்பாமலேயே அப்படி ஆட்டுமந்தையாகப் பின்பற்றியதால் பின்வரும் தலைமுறையினர் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்லத் தெரியாமல் போன பரிதாபநிலை உருவாகி விட்டது.

மாபெரும் ஆன்மிக உண்மைகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தினத்தந்தியில் தொடர்ந்து ஒருவருடம் என்.கணேசன் எழுதி வந்த அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஆகஸ்ட் 2014ல் ப்ளாக்ஹோல்மீடியா பதிப்பாளரால் வெளியிடப்பட்ட இந்த நூல் பின் அடுத்து இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.

இந்த நூலில் இருப்பவை-

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

கோவில் வழிபாடு ஏன்?

உபவாசம் எதற்காக?

சத்சங்கம் ஏன் முக்கியம்?

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு!

கும்பாபிஷேகம் எதற்காக?

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

திருநீறு அணிவது எதற்காக?

இறைவழிபாட்டில் துளசி, வில்வம்

வழிபாட்டில் சங்கு, மணியின் பங்கு!

தாமரையின் தனிச்சிறப்பு

தேங்காய் உடைப்பது ஏன்?

அணுவில் ஆண்டவன்!

தியானம் ஏன் அவசியம்?

ஆழ்வார்களின் ஆன்மீகமும், அறிவியலும்

மார்கழியில் ஆன்மீகமும், ஆரோக்கியமும்

ஓம் மந்திரச் சிறப்பு

கும்பமேளா என்றால் என்ன?

ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்

காயத்ரி மந்திரத்தின் மகிமை

பரிணாம வளர்ச்சியில் தசாவதாரம்

ஆராயப்படும் ஆன்மீகம்

போதிதர்மரும் போதனைகளும்

வள்ளலார் வலியுறுத்திய ஆன்மிகம்

ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைதம்

மத்வர் உபதேசித்த த்வைதம்

ராமானுஜர் உபதேசித்த விசிஷ்டாத்வைதம்

மூன்றும் உண்மைகளே

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்

கபீர் கற்பிக்கும் ஆன்மிகம்

நான்கு உண்மைகள், எட்டு வழிகள்!

அர்த்தம் மிகுந்த அஷ்டவக்ர கீதை

மகாவீரரின் மகத்தான போதனைகள்

பத்ரகிரியாரும் மெய்ஞானப் புலம்பலும்

இறைவழிபாட்டு முறைகள்

இறைவன் அருவமா, உருவமா?

உண்மையான பக்தி

எதையும் புரிந்து செய்யுங்கள்

வணங்காவிட்டாலும் இறைவன்!

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!

எது சிறந்தது இல்லறமா, துறவறமா?

மாயை என்பது என்ன?

கர்மா என்பது என்ன?

தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்?

கடமையா? பக்தியா?

உண்மையான குரு யார்?

நிம்மதிக்கும், முக்திக்கும் யோக வாசிஷ்டம்!

ஞானத்தின் அளவுகோல்!

உபநிடதங்கள் உணர்த்தும் உண்மைகள்!

பகவத் கீதையின் பரிபூரண மனிதன்

உண்மையான ஆன்மீகம்
1) 


இந்தத் தலைப்புகளில்  ஆன்மிக உன்னதங்களின் ஆழமான அர்த்தங்களையும் பலன்களையும் 52 கட்டுரைகளில் எவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்கும்  இந்த நூல் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய நூலாகவும், ஆன்மிக நண்பர்களுக்கு பரிசளிக்க உகந்த நூலாகவும் இருக்கும். இதன் விலை ரூ.250/- 

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


தினமணி-08.12.2014

சனி, 8 ஜனவரி, 2022

மகாசக்தி மனிதர்கள்!





என்.கணேசன் சித்தர்கள், யோகிகள், மகான்களின் அபூர்வசக்திகள் குறித்து தினத்தந்தியில் தொடராக அறுபது வாரங்கள் எழுதி வெளி வந்த  ”மகாசக்தி மனிதர்கள்” புத்தக வடிவிலும் தந்தி பதிப்பகத்தால் மே 2016ல் வெளியிடப்பட்டிருக்கிறது.    இந்த நூலில் சேர்த்திருக்கும் சம்பந்தப்பட்ட பல வண்ணப் புகைப்படங்கள் வாசகர்களுக்குச் சுவை கூட்டும் புதிய அனுபவமாக இருக்கும். இதன் இரண்டாம் பதிப்பு ஜனவரி 2017ல் வெளியானது. மூன்றாம் பதிப்பு செப்டம்பர் 2023ல் என்.கணேசன் புக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த நூல் குறித்து தினத்தந்தியில் 18.05.2016ல் வெளி வந்த விமர்சனம்

ன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே ‘மகாசக்தி மனிதர்கள்’ என்று போற்றுகிறோம். 

அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாக வெளி வந்துள்ளது. 

இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரைலைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார்.

மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. 

நன்றி: தினத்தந்தி 18.05.2016

இந்த நூல் குறித்து தினமலரில் 8.1.2017 அன்று வெளிவந்த விமர்சனம்


அபூர்வ சக்திகள் மற்றும் ஆன்மிக சித்தர்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.

278 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.300/-

புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K




திங்கள், 3 ஜனவரி, 2022

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்!

 


பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

என்.கணேசன் அவர்களின் பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 2012 ப்ளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு அக்டோபர் 2013லும், மூன்றாம் பதிப்பு அக்டோபர் 2014லும், நான்காம் பதிப்பு ஜுலை 2017லும் வெளியாகியுள்ளது. ஐந்தாம் பதிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியாகியுள்ளது. 136 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.170/-

உள்ளே உள்ள சில அத்தியாயங்கள்

நள்ளிரவில் பிரமிடுக்குள்

உடலைப் பிரிந்து ஒரு பயணம்

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி

ஆவி பூதங்களை ஆட்கொண்ட மனிதன்

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும், முடியாததும்.

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை

ரகசிய தீட்சை- இரண்டாம் பிறப்பு

இறைவனின் மொழியும், இறந்தவர்கள் புத்தகமும்

கர்னாக் கோயிலின் இரகசியக் குறிப்புகள்

பாம்பு, தேள்களை வசியம் செய்தவர்

பாம்பு வசியத்தின் அபாயங்களும் சூட்சுமங்களும்

பால் ப்ரண்டன் கண்ட அதிசய மனிதர்

உலகத்திற்கு ஒரு எச்சரிக்கை


எகிப்தில் பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி பெற்ற சுவாரசிய அனுபவங்களையும், ஆன்மீக ஞானத்தையும், அபூர்வ சக்திகளின் சூட்சுமங்களையும் விளக்கும் இந்த அச்சு நூலையும், என்.கணேசனின் மற்ற நூல்களையும் ஆன்லைனில் அமேசானில்  வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8196319622


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

 

அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும் படிக்கலாம். லிங்க்

https://www.amazon.com/dp/B09TRQDD1D

சனி, 1 ஜனவரி, 2022

சங்கீத மும்மூர்த்திகள்!




சங்கீத மும்மூர்த்திகள்!


சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் இம்மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட இசைச்சக்கரவர்த்திகள்.  சமகாலத்தவர்களான இவர்கள் மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது இசை தவிர இவர்களுக்கிருக்கும் இன்னொரு ஒற்றுமை.

என்.கணேசன் அவர்கள் இந்த நூலில் மூவருடைய வாழ்க்கை வரலாற்றையும், இவர்களது அமரத்தன்மை வாய்ந்த பாடல்களுக்குப் பின்னணியாக இருந்த சுவாரசிய சம்பவங்களையும் இந்த நூலில் சிறப்பாக விவரித்துள்ளார்.

உதாரணமாக சியாமா சாஸ்திரி மதுரை மீனாட்சி அம்மனைத் தியானித்து நவரத்ன மாலிகை பாடியது, தியாகையர் நிதிசால சுகமா, முந்துவேனுக, சாந்தமு லேக சவுக்கியமுலேது ஆகிய பாடல்களைப் பாடியது, முத்துசாமி தீட்சிதர் தியாகராஜம் பஜே மற்றும் ஹிரண்மயிம் லஷ்மீம் பஜாமி பாடியது போன்றவற்றின் பின்னணிக்கதைகள் மிக சுவாரசியமானவை. 

அதே போல் இம்மூவரின் பாடல்களில் இருக்கும் தத்துவஞானமும் ஆன்மீக அன்பர்கள் அறிய வேண்டியது. இம்மூவர் வாழ்ந்த வீடுகளின் புகைப்படங்களும் இந்த நூலில் இருப்பது இன்னொரு சிறப்பு!

கர்நாடக சங்கீத இசையில் ஆர்வம் உள்ளவர்களும், ஆன்மீக அன்பர்களும்  படித்து ரசிக்க இந்த நூலில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. 
 
ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் ஆகஸ்ட் 2013 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 2025 ஆகஸ்டில் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது.  இந்த நூலின் விலை ரூ100/- 


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நூலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8197192057


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

  இந்த நூல் அமேசான் கிண்டிலிலும் வெளியாகியுள்ளது. லிங்க் -


 

தினமணியில் இந்த நூலிலிருந்து ஒரு சம்பவத்தை 16.2.2014 அன்று வெளியிட்டிருந்தார்கள்.