இன்றைய (24.09.2023) தினத்தந்தியில் எழுத்தாளர் என்.கணேசனின் ’உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்’ நூலின் விமர்சனம் வந்துள்ளது.
எழுத்தாளர் என்.கணேசன் எழுதியுள்ள அனைத்து நூல்களின் அனைத்து விவரங்களும், நூற்குறிப்புகளும், சில நாவல்களின் இலவச அத்தியாயங்களும் இங்குள்ளன.
சனி, 23 செப்டம்பர், 2023
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
Attain Success & Retain Peace (Revised & enlarged Edition)
என்.கணேசனின் ஆங்கிலப் புத்தகம் Attain Success & Retain Peace மேலும் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. இந்த நூல் குறித்த பின்னட்டைக் குறிப்பு -
Do you
want to achieve remarkable success without losing peace of mind? If the answer
is “yes!” then this book is for you.
Here
you’ll find –
Ten
Rules to Success & Peace
How to
deal with setbacks and Failures?
How to
come out of depression?
How to
deal with stress & toxic thoughts?
Signs of
transformation
Many other tips to achieve success and Peace.
இந்த நூலை கிண்டிலில் படிக்க லிங்க் -
https://www.amazon.in/dp/B0CF1ZN5CD
வெளிநாட்டு வாசகர்கள் மற்றும் கிண்டில் வாசகர்கள் இந்த மின்னூலை வாங்கிப் படித்துக் கொள்ளலாம்.
இந்தப் புத்தகம் பத்து நாட்களில் அச்சுப்புத்தகமாகவும் என்.கணேசன் புக்ஸால் வெளியிடப்படவிருக்கிறது. 162 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அச்சில் வந்தவுடன் தெரிவிக்கிறோம்.
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
என்.கணேசன் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது.
பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு.
தோல்வி என்பது இடைவேளை - தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.
என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும், புற வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
வியாழன், 13 ஜனவரி, 2022
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!
வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்! வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்த நூலை வாங்குவது நல்ல மூலதனமாக இருக்கும். உங்கள் வசம் வைத்திருக்கவும், நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்களுக்கு நல்ல உபயோகமான பரிசளிக்கவும் தகுதியான சிறப்பான நூல் இது. சில வருடங்களுக்கு முன் ஒரு பள்ளி தங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இந்த நூலை வாங்கிப் பரிசாகத் தந்திருக்கிறது.
இந்த நூல் வெளியான போது தினத்தந்தியில் வந்த விமர்சனம் இதோ-
ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2013லும், இரண்டாம் பதிப்பு ஜனவரி 2014லும், மூன்றாம் பதிப்பு ஆகஸ்ட் 2014லும், நான்காம் பதிப்பு ஜனவரி 2016 லும், ஐந்தாம் பதிப்பு ஜுன் 2016லும் வெளியாகியுள்ளன. ஆறாவது பதிப்பு மார்ச் 2024ல் என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 128 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.150/-
இந்த நூலை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அமேசானில் வாங்கிப் படிக்க விரும்புபவர்களுக்கு லின்க்-
அமேசான் கிண்டிலிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. லிங்க் -
https://www.amazon.in/dp/B09QCVG2HY
சுய முன்னேற்றத்திலும், வெற்றிகரமான வாழ்க்கையிலும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் படித்துப் பயனடைய வேண்டிய நூல் இது!
ஞாயிறு, 2 ஜனவரி, 2022
உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்!
அப்படியே படிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்தாலும் ஏராளமான நல்ல நூல்கள் இருக்கின்றன. எங்கிருந்து ஆரம்பிப்பது, குறுகிய காலத்தில் அதிகமாகப் படித்துப் பயன்பெறுவது எப்படி என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த நிலைமையையும், அதற்கான தீர்வையும் ஒரு சமஸ்கிருத சுலோகம் அழகாகச் சொல்கிறது.
அனந்த சாஸ்திரம் பகுவேதிதவ்யம்
ஸ்வல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னா
யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்
ஹம்ஸோ யதா க்ஷீரம் இவாம்
மிஸ்ரம்.
இதன் பொருள் இது தான்: எத்தனையோ
சாஸ்திரங்கள் இருக்கின்றன. தெரிந்து கொள்ள வேண்டியவையோ அதிகம். நமக்கிருக்கும்
காலமோ மிகக் குறுகியது. அதை அறிந்து கொள்ள இடையூறுகளோ அதிகம். ஆகையால்
அன்னப்பறவை தண்ணீரில் கலந்த பாலை மாத்திரம் பருகுகிற மாதிரி நாமும் எது சாரமோ அதை மட்டும்
கிரகித்துக் கொள்ள வேண்டும்.
வாசகர்களே, உங்களுக்காக அன்னப்பறவையின் வேலையை நான் இந்த நூலில் செய்திருக்கிறேன். பல நூல்களின் சாராம்சத்தை, சாராம்ச வார்த்தைகளை, சிந்திக்க வைக்கும் அருமையான கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். எந்த ஒரு தனி சாராம்சமும், கருத்தும், விளக்கமும் சேர்ந்து உங்களுக்குப் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
யோசிக்கவும், வழிகாட்டவும், உங்களை மெல்ல மாற்றவும் முடிந்த இந்த ஒவ்வொரு கருத்தையும் ஒரு நாளில் ஒன்று எனப் படிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் படித்து முடித்தாலும் அந்த நாள் முழுவதும் நேரம் கிடைக்கையில் எல்லாம் படித்ததை அடிக்கடி சிந்தியுங்கள். மனதில் ஆழப்படுத்துங்கள். அந்த உண்மையை உங்கள் மனதில் அசைபோடுங்கள். அது பலவிதங்களில் உங்களை நல்லவிதமாக மாற்றிக் கொள்ளவும், உயரவும் உதவும்.
ஆதிசங்கரரிலிருந்து அடியேன் எழுதியது வரை, இந்த நாட்டு ஞானிகள் சொன்னதிலிருந்து மேலை நாட்டு ஞானிகள் சொன்னது வரை, திருக்குறளில் இருந்து உபநிடதம் சொன்னது வரை ஒரு மனிதனை சிந்திக்கவும், உயர்த்தவும், வெற்றி பெறவும், அமைதியடையவும் வைக்கும்படியான பல நூல்களின் உபதேச சாரங்கள் ஐந்தைந்து நிமிடத் துளிகளில் படித்து முடிக்கும்படியாக இங்கே தந்திருக்கிறேன்.
இந்த நூலைப் படித்து முடிக்கையில் பல நூல்களைப் படித்து முடித்த திருப்தியும், பயன்பாடும் தங்களுக்கு இருக்கும் என்பது உறுதி!”
நாம் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் பல முக்கியக் கேள்விகளுக்கு இந்த நூலில் மிகச்சரியான பதில்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு -
மனிதர்களிடம் நிறைய எதிர்பார்ப்பது சரியா?
ஏன் எண்ணப்படியே எல்லாம் ஆவதில்லை?
நாசமாக்கும் குணங்கள் எவை?
ஏன் அன்பு செலுத்தியும் பலனிருப்பதில்லை?
எப்படிச் செயல்புரிய வேண்டும்?
நல்லவனுக்குக் காலமில்லையா?
வாழ்வில் உயிரோட்டம் இருக்கிறதா?
நம் தேவைகளில் அவசியமானவை எத்தனை?
அனைத்தையும் புனிதமாக்கும் வழி என்ன?
விதி சோதிக்கும் போது ஜெயிப்பது எப்படி?
டென்ஷன் இல்லாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
யோகம் எப்படிக் கைகூடும்?
ஆழ்மனசக்திகளுக்கு எதிரான மனநிலைகள் எவை?
உங்களையும் மீறித் தவறு செய்ய முடியுமா?
தடைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்?
தியானம் ஏன் முக்கியம்?
மன அமைதிக்கு என்ன வழி?
துன்பங்களின் மூலம் என்ன?
எண்ணியதை எண்ணியபடி முடிப்பது எப்படி?
கற்பனையைப் பயன்படுத்தி உயர்வதெப்படி?
நல்லது செய்தாலும் தவறாவது எப்போது?
உலகம் உங்களை எடைபோடுவது எப்படி?
தலைவனாக்கும் தன்மை எது?
குறையாத மகிழ்ச்சியின் ரகசியம் எது?
கெடப்போவதற்கு அறிகுறி என்ன?
விடைகளை அறியவும், ஐந்தைந்து நிமிடங்களில் அறிவுப் பொக்கிஷங்கள் பெறவும் இந்த நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள்.
நூலின் லிங்க் - https://www.amazon.in/dp/B08526TV7Q
வெள்ளி, 31 டிசம்பர், 2021
தோல்வி என்பது இடைவேளை!
தோல்வி என்பது இடைவேளை
என்.கணேசனின் இந்த நூல் அவர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் 33 தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் இருக்கின்றன. வெற்றிக்கும் சாதனைக்கும் வேண்டிய அனைத்து விஷயங்களையும் அடக்கிய இந்த நூல் தற்போது அமேசான் கிண்டிலில் இந்த நூல் இருக்கிறது.
புத்தகத்தை அமேசானில் வாங்க லிங்க்
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தோல்வி என்பது இடைவேளையில் உள்ள கட்டுரைத் தலைப்புகள்
1. முடியாதது முயலாதது மட்டுமே!
2. அவசரம் தேவையா?
3. நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்!
4. உங்கள் கோப்பை நிறைந்திருக்கிறதா?
5. வெற்றி=1%அறிவு+99% உழைப்பு
6. எதிர்பாருங்கள் - உங்களிடம் மட்டும்
7. விஷவலையில் விழாதீர்கள்
8. நீங்கள் ஒரு காந்தம்!
9. கனவு காணத் தயங்காதீர்கள்!
10. கழுதையிடமும் கற்கலாம்!
11. தோல்வி நிறைய கற்றுத் தரும்!
12. வெற்றிக்கு ஏழு குறள்கள்
13. யார் மாற வேண்டும்?
14. மறக்கும் கலை
15. சிகரங்களும், சமவெளிகளும்!
16. நாம் வாழ மறக்கிறோமா?
17. எதையும் யாரையும் ஒப்பிடாதீர்கள்!
18. ஒரு நிமிடம் நிதானியுங்கள்!
19. கோபத்தைக் களைவது எப்படி?
20. உங்களுக்குப் பிரச்னையா? இதை அவசியம் படியுங்கள்!
21. ஆகாது-முடியாது-நடக்காது
22. தன்னம்பிக்கையும், கர்வமும்!
23. நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?
24. தினமும் ஒரு டெபாசிட்!
25. திறமை இருந்தும் தோல்வி ஏன்?
26. தோல்வி என்பது இடைவேளை!
27. உள்ளே ஒரு எதிரி!
28. உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!
29. உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?
30. வாழ்க்கையில் ஒரு சவால்!
31. விமர்சனங்களால் வீழ்ந்து விடாதீர்கள்!
32. என்றேனும் ஒரு நாள்
33. செக்குமாடாய் உழைக்காதீர்கள்!
தோல்வியால் துவண்டிருப்பவர்களும், தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களும், பழைய தவறுகளின் விளைவுகளால் விரக்தி அடைந்திருப்பவர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும், வெற்றி அடையத் துடிப்பவர்களும் இந்த நூலைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள். இது உங்கள் தவறான மனநிலைகளை மாற்றி வெற்றியடைய வைக்கும் என்பது உறுதி!




