ஞாயிறு, 2 ஜனவரி, 2022

உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்!


 உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்!


என்.கணேசனின் இந்த நூல் மற்ற எல்லா நூல்களையும் விட மிக வித்தியாசமானது. அமேசான் கிண்டிலில் மட்டுமே பிரசுரிக்க அவர் உருவாக்கிய நூல், அதிகம் படிக்க ஆர்வமிருந்தும் கால அவகாசம் இல்லாதவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது. எப்படி என்று கேட்கிறீர்களா? அவரே அவரது முன்னுரையில் அதை விளக்குகிறார்:

”பலருக்கு நிறைய நல்ல நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான நேரமும், பொறுமையும்  இருப்பதில்லை. அதனாலேயே படிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஆனாலும் படிக்காத அந்த மனக்குறை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

அப்படியே படிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்தாலும் ஏராளமான நல்ல நூல்கள் இருக்கின்றன. எங்கிருந்து ஆரம்பிப்பது, குறுகிய காலத்தில் அதிகமாகப் படித்துப் பயன்பெறுவது எப்படி என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலைமையையும், அதற்கான தீர்வையும் ஒரு சமஸ்கிருத சுலோகம் அழகாகச் சொல்கிறது.                               

அனந்த சாஸ்திரம் பகுவேதிதவ்யம்

ஸ்வல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னா

யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்

ஹம்ஸோ யதா க்ஷீரம் இவாம் மிஸ்ரம்.


இதன் பொருள் இது தான்: எத்தனையோ சாஸ்திரங்கள் இருக்கின்றன. தெரிந்து கொள்ள வேண்டியவையோ அதிகம். நமக்கிருக்கும் காலமோ மிகக் குறுகியது. அதை அறிந்து கொள்ள இடையூறுகளோ அதிகம். ஆகையால் அன்னப்பறவை தண்ணீரில் கலந்த பாலை மாத்திரம் பருகுகிற மாதிரி நாமும் எது சாரமோ அதை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

வாசகர்களே, உங்களுக்காக அன்னப்பறவையின் வேலையை நான் இந்த நூலில் செய்திருக்கிறேன். பல நூல்களின் சாராம்சத்தை, சாராம்ச வார்த்தைகளை, சிந்திக்க வைக்கும் அருமையான கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். எந்த ஒரு தனி சாராம்சமும், கருத்தும், விளக்கமும் சேர்ந்து உங்களுக்குப் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

யோசிக்கவும், வழிகாட்டவும், உங்களை மெல்ல மாற்றவும் முடிந்த இந்த ஒவ்வொரு கருத்தையும் ஒரு நாளில் ஒன்று எனப் படிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் படித்து முடித்தாலும் அந்த நாள் முழுவதும் நேரம் கிடைக்கையில் எல்லாம் படித்ததை அடிக்கடி சிந்தியுங்கள். மனதில் ஆழப்படுத்துங்கள். அந்த உண்மையை உங்கள் மனதில் அசைபோடுங்கள். அது பலவிதங்களில் உங்களை நல்லவிதமாக மாற்றிக் கொள்ளவும், உயரவும் உதவும்.

ஆதிசங்கரரிலிருந்து அடியேன் எழுதியது வரை, இந்த நாட்டு ஞானிகள் சொன்னதிலிருந்து மேலை நாட்டு ஞானிகள் சொன்னது வரை, திருக்குறளில் இருந்து உபநிடதம் சொன்னது வரை ஒரு மனிதனை சிந்திக்கவும், உயர்த்தவும், வெற்றி பெறவும், அமைதியடையவும் வைக்கும்படியான பல நூல்களின் உபதேச சாரங்கள்  ஐந்தைந்து நிமிடத் துளிகளில் படித்து முடிக்கும்படியாக இங்கே தந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து முடிக்கையில் பல நூல்களைப் படித்து முடித்த திருப்தியும், பயன்பாடும் தங்களுக்கு இருக்கும் என்பது உறுதி!”


நாம் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் பல முக்கியக் கேள்விகளுக்கு இந்த நூலில் மிகச்சரியான பதில்கள் இருக்கின்றன.   உதாரணத்திற்கு -

மனிதர்களிடம் நிறைய எதிர்பார்ப்பது சரியா

ஏன் எண்ணப்படியே எல்லாம் ஆவதில்லை

நாசமாக்கும் குணங்கள் எவை

ஏன் அன்பு செலுத்தியும் பலனிருப்பதில்லை

எப்படிச் செயல்புரிய வேண்டும்

நல்லவனுக்குக் காலமில்லையா    

வாழ்வில் உயிரோட்டம் இருக்கிறதா   

நம் தேவைகளில் அவசியமானவை எத்தனை   

அனைத்தையும் புனிதமாக்கும் வழி என்ன?    

விதி சோதிக்கும் போது ஜெயிப்பது எப்படி    

டென்ஷன் இல்லாமலிருக்க என்ன செய்ய வேண்டும்   

யோகம் எப்படிக் கைகூடும்   

ஆழ்மனசக்திகளுக்கு எதிரான மனநிலைகள் எவை  

உங்களையும் மீறித் தவறு செய்ய முடியுமா   

தடைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்   

தியானம் ஏன் முக்கியம் 

மன அமைதிக்கு என்ன வழி 

துன்பங்களின் மூலம் என்ன 

எண்ணியதை எண்ணியபடி முடிப்பது எப்படி 

கற்பனையைப் பயன்படுத்தி உயர்வதெப்படி  

நல்லது செய்தாலும் தவறாவது எப்போது

உலகம் உங்களை எடைபோடுவது எப்படி

தலைவனாக்கும் தன்மை எது?                   

குறையாத மகிழ்ச்சியின் ரகசியம் எது?

கெடப்போவதற்கு அறிகுறி என்ன?

விடைகளை அறியவும், ஐந்தைந்து நிமிடங்களில் அறிவுப் பொக்கிஷங்கள் பெறவும் இந்த நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள். 

நூலின் லிங்க் - https://www.amazon.in/dp/B08526TV7Q


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக