திங்கள், 25 மே, 2026

N.Ganeshan's First Novel "Whispers of the Thamirabarani" in English released today!

N.Ganeshan's first Tamil novel நீ நான் தாமிரபரணி  is translated in English by G.Anusha, as "Whispers of the Thamirabarani" and released today!



In ‘Whispers of the Thamirabarani’, author N. Ganeshan employs a fascinating "novel within a novel" structure: the protagonist, an aspiring journalist named Arun, is tasked with uncovering the mystery of a famous author who vanished twenty-five years ago at the height of his fame. As Arun delves deeper, he discovers that the secrets of the past are hidden within the pages of the novel. At its core, this novel is a tribute to the power of storytelling. In this novel, the author masterfully balances a suspenseful investigation with a poignant exploration of family bonds and human sacrifice. This English edition aims to bring this multi-layered narrative to a wider stage, inviting new readers to solve the mystery alongside Arun. 

This novel contains 248 pages and costs ₹360/-

To buy the book contact the publisher by whatsapp to 94863 09351.

To buy online in Amazon link-

https://www.amazon.in/dp/819719209X

To read in Amazon Kindle -

https://www.amazon.in/dp/B0H2SJ5ZXJ



 


என்.கணேசனின் புதிய நாவல் ச(க்)தி வெளியீடு!

 


எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவலான ச(க்)தி நமது பதிப்பகத்தால்  இன்று வெளியிடப்பட்டுள்ளது. 648 பக்க இந்த நாவலின் விலை ₹780/-

கதைக்களம்

சித்தர்களாலும், மன்னர்களாலும், நாகங்களாலும் மாறி மாறி வழிபடப்பட்ட சக்தி வாய்ந்த மிகப் பழமையான பகவதி சிலை கொச்சி ராஜா சக்தன் தம்புரானால் திருச்சூருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வரவழைக்கப்படுகிறது. வரும் வழியில் ஒரு ஜமீன் பூமியில் இறங்கி விட்ட பகவதி சிலையப் பின் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதே சமயத்தில் சக்தன் தம்புரானும் இறந்து விட ஜமீன்தார் அதற்கு அங்கேயே கோயில் கட்டுகிறார். பகவதியின் சக்திகளுக்காக சிலை கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் கொள்ளையர்களுக்கும் சிக்காமல் பெருமழையால் பகவதி சிலை மண்ணில் புதைகிறது. ஜமீன் குடும்பத்தின் தற்போதைய வாரிசு அதை மண்ணிலிருந்து மேலே எடுத்து கோயில் கட்ட முனைகிறார். பகவதி சிலையோடு முன்பிருந்தே இருந்த வெள்ளிப் பேழையில் ஒரு சேர மன்னன் எழுதிய பழைய ஓலையும் அவருக்குக் கிடைக்கிறது. அதில் பகவதி சிலை குறித்த குறிப்புகள் இருப்பது அறிந்து ஆராயப் போகும் போது, ஆராயும் மனிதர் கொல்லப்பட்டு வெள்ளிப்பேழை களவு போகிறது. அதன் பின் என்ன நடக்கின்றது, பகவதி கோயில் கட்டப்படுகிறதா, பகவதியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள நடக்கும் சதிகளுக்கு பகவதி உடன்படுகிறாளா என்பதை எல்லாம் அறிய இந்த நாவலைப் படியுங்கள். குடும்பம், நட்பு, காதல், ஆன்மீகம், யோக சக்தி, அமானுஷ்யம், சூழ்ச்சிகள்,  துப்பறிதல் என்ற பல இழைகளால் பின்னப்பட்ட இந்த நாவல் உங்களை திரும்பத் திரும்ப படிக்க வைக்கும்! 


இந்த நாவலை பதிப்பாளரிடமிருந்து வாங்க பதிப்பாளரை 9486309351 எண்ணில் வாட்சப்பில்  தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-

https://www.amazon.in/dp/8197192065



புதன், 22 ஏப்ரல், 2026

இன்றைய சென்னை தினமலரில் வியூகம் நாவல் விமர்சனம்!

 இன்றைய (23.4.2026) சென்னை பதிப்பு தினமலரில் எழுத்தாளர் என்.கணேசனின் வியூகம் நாவலுக்கு விமர்சனம் வந்துள்ளது.



 

புதன், 11 மார்ச், 2026

வியாழன், 8 ஜனவரி, 2026

சென்னை புத்தகக் காட்சியில் என்.கணேசன் நூல்கள்


 தற்போது துவங்கியிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் என்.கணேசனின் நூல்கள் அரங்கு எண் 24 & 25 (தமிழ்த்தேசம் புத்தக அங்காடி)யில் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



ஞாயிறு, 16 நவம்பர், 2025

என்.கணேசனின் புதிய நாவல் “வியூகம்” வெளியீடு!


 

அன்பு வாசகர்களே!

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவலான “வியூகம்” இன்று மாலையில் வெளியாகவிருக்கிறது. 

கதைக்களம்

வருமானவரித் துறையின் திடீர் சோதனை வருகிறது என்று செய்தி கிடைத்தவுடன், அவசரமாக கண்டெய்னர் லாரியில் இடம் மாற்றப்படும் 510 கோடி ரூபாய் கடத்தப்படுகிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொல்லப்படுகிறார். அவர் முன்பு ஒரு விசாரணையில் தவறாகத் தீர்ப்பு தந்து ஒரு நேர்மையான அதிகாரியைத் தண்டித்தவர் என்பது வெளியாகிறது. மிகவும் பாதுகாப்புடன் ஒரு மர்ம வீட்டில் பதுக்கப்பட்டிருக்கும் தங்கம், வைரம், பணம் கடத்தப்பட முயற்சி நடக்கிறது. உண்மை அறிய சிலரும், உண்மையை மறைக்க சிலரும் முயல, தீவிரமாகவும் தந்திரமாகவும் பல வேலைகள் நடக்கின்றன. இந்த சம்பவங்களின் பின்னணியில் திட்டமிடுவதும், அசாத்தியத் துணிச்சலுடன் அனைத்தையும் செயல்படுத்துவதும் ஒரு தனிமனிதன்! நீதிக்காக அதிகார வர்க்கத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கத் துணிந்திருக்கும் அவனுடைய திட்டம் வெற்றி பெறுமா? விடை அறிய, குடும்பம், பாசம், நட்பு, காதல், அரசியல், நவீன தொழில் நுட்பம், கொலை, கொள்ளை, சாகசம் அனைத்தும் கலந்த, பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த நாவலைப் படியுங்கள்!

 


610 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.720/-

இந்த நாவலை பதிப்பாளரிடமிருந்து வாங்க பதிப்பாளரை 9486309351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-

https://www.amazon.in/dp/8197192014



புதன், 27 ஆகஸ்ட், 2025

சாணக்கியன் நாவல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!

 



என்.கணேசனின்  சரித்திர நாவல் சாணக்கியன் (இருபாகங்கள்) வாசகர்களின் மகத்தான ஆதரவால் இன்று இரண்டாம் பதிப்பை சந்தித்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்!

இரண்டாம் பதிப்பில் இந்த நாவலின் விலை ரூ1100/- (முதல் பாகம் ரூ530/- இரண்டாம் பாகம் ரூ570/-

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

யோகி நாவல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!


 என்.கணேசனின் யோகி நாவல் குறுகிய காலத்தில் முதல் பதிப்பு நூல்கள் விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு இன்று  வெளியாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாம் பதிப்பின் விலை ரூ.820/-

பேராதரவு தந்து அதை வெற்றி நூலாக்கிய வாசகர்களுக்கு எங்கள் நன்றிகள்.



திங்கள், 18 ஆகஸ்ட், 2025

என்.கணேசனின் “சங்கீத மும்மூர்த்திகள்” நூல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!

 

எழுத்தாளர் என்.கணேசனின் சங்கீத மும்மூர்த்திகள் முதல் பதிப்பு முழுவதுமாக விற்று தீர்ந்து நீண்ட காலம் ஆயிற்று. இசையில் ஆர்வமுள்ள வாசகர்களும், அவருடைய எல்லா நூல்களையும் வாங்கி வைத்திருக்க விரும்பும் வாசகர்களும் தொடர்ந்து வேண்டிக் கொண்டதற்கு இணங்க இரண்டாம் பதிப்பு இன்று வெளியிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


நூலை வாங்க விரும்பும் வாசகர்கள் 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.


அமேசானில் ஆன்லைனில் வாங்க லிங்க் 

https://www.amazon.in/dp/8197192057



புதன், 23 ஜூலை, 2025

வியாழன், 3 ஜூலை, 2025

திங்கள், 2 ஜூன், 2025

என்.கணேசனின் புதிய நாவல் “கர்மா” வெளியீடு!

  


எழுத்தாளர் என்.கணேசனின் கர்மா நாவல் இன்று வெளியாகியுள்ளது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ₹800/-

நவீன் பாலாஜி  என்ற ஒரு இளம் தேசிய செஸ் சேம்பியனுக்கு ஒரு மனிதனின் மரணக் காட்சி கனவாக வருகிறதுஅது இயற்கை மரணம் அல்ல என்பதும் தெரிய வருகிறதுதொடர்ந்துவிழித்திருக்கையிலேயே அவன் மனத்திரையில் விரியும் சில காட்சிகள்அவை அவனுடைய முற்பிறவி நினைவுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பஅவன் யாரது என்றும்அந்தக் குடும்பத்தினரையும் கண்டுபிடிக்கிறான் குடும்பத்தினரில் யாரோ ஒருவரே கொலையாளி என்றும் தெரிய வரகொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறான்கொலையாளி நவீனுக்கு வரும் பூர்வீக நினைவுகளைத் தடுக்க ஒரு அமானுஷ்ய சக்தியை நாடகதைக் களம் சூடுபிடிக்கிறதுகொலையாளியைக் கண்டுபிடிக்க நவீன் எடுக்கும் துப்பறியும் முயற்சிகளும்கொலையாளி தந்திரமாக அதைத் தடுக்கும் முயற்சிகளும்அதை முறியடிக்க நவீன் எடுக்கும் முயற்சிகளும்குடும்பம்பாசம்காதல்அமானுஷ்யம்உளவியல்மறுபிறவி ஆகிய அம்சங்களுடன் மிக விறுவிறுப்பாகவும்சுவாரசியமாகவும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன.

நாவலை பதிப்பாளரிடமிருந்து நேரடியாக வாங்க 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

நாவலை அமேசானில் ஆன்லைனில்  வாங்க 




ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நேற்றைய (16.2.2025) தினமலரில் ரட்சகன் நாவலின் விமர்சனம்

 நேற்றைய (16.2.2025) தினமலர் கோவை, சென்னை, பெங்களூர் பதிப்புகளில் எங்கள் புதிய நாவல் ரட்சகனுக்கு வந்துள்ள விமர்சனம்