திங்கள், 2 ஜூன், 2025

என்.கணேசனின் புதிய நாவல் “கர்மா” வெளியீடு!

  


எழுத்தாளர் என்.கணேசனின் கர்மா நாவல் இன்று வெளியாகியுள்ளது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ₹800/-

நவீன் பாலாஜி  என்ற ஒரு இளம் தேசிய செஸ் சேம்பியனுக்கு ஒரு மனிதனின் மரணக் காட்சி கனவாக வருகிறது. அது இயற்கை மரணம் அல்ல என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து, விழித்திருக்கையிலேயே அவன் மனத்திரையில் விரியும் சில காட்சிகள், அவை அவனுடைய முற்பிறவி நினைவுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்ப, அவன் யாரது என்றும், அந்தக் குடும்பத்தினரையும் கண்டுபிடிக்கிறான்.  குடும்பத்தினரில் யாரோ ஒருவரே கொலையாளி என்றும் தெரிய வர, கொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறான். கொலையாளி நவீனுக்கு வரும் பூர்வீக நினைவுகளைத் தடுக்க ஒரு அமானுஷ்ய சக்தியை நாட, கதைக் களம் சூடுபிடிக்கிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்க நவீன் எடுக்கும் துப்பறியும் முயற்சிகளும், கொலையாளி தந்திரமாக அதைத் தடுக்கும் முயற்சிகளும், அதை முறியடிக்க நவீன் எடுக்கும் முயற்சிகளும், குடும்பம், பாசம், காதல், அமானுஷ்யம், உளவியல், மறுபிறவி ஆகிய அம்சங்களுடன் மிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன.

நாவலை பதிப்பாளரிடமிருந்து நேரடியாக வாங்க 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

நாவலை அமேசானில் ஆன்லைனில்  வாங்க