சதுரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சதுரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூலை, 2024

தினமலரில் சதுரங்கம் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்!

 கடந்த ஞாயிறு (07.07.2024) அன்று சென்னைப் பதிப்பிலும், இன்றைய (11.07.2024) மதுரைப் பதிப்பிலும் சதுரங்கம் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம் - 




சனி, 4 மே, 2024

இன்றைய (5.5.2024) தினத்தந்தியில் சதுரங்கம் நாவல் விமர்சனம்

 இன்றைய (5.5.2024) தினத்தந்தியில் எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் சதுரங்கத்திற்கு வந்திருக்கும் விமர்சனம் இதோ -




புதன், 10 ஏப்ரல், 2024

இன்றைய தினமலரில் ’சதுரங்கம்’ நாவல் விமர்சனம்!

 இன்றைய (11.04.2024) தினமலர் மதுரை பதிப்பில் என்.கணேசனின்  “சதுரங்கம்” நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம் -



 

புதன், 13 மார்ச், 2024

என்.கணேசனின் புதிய நாவல் “சதுரங்கம்” வெளியீடு



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் ”சதுரங்கம்” இன்று அச்சில் வெளியாகியுள்ளது. 646 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.730.

இந்த நாவலின் கதைக்களம் அரசியல் சதுரங்கம். 

ஒரு பிரபல நடிகை கொலை செய்யப்பட, அவள் காதலன் தன் உயிருக்குப் பயந்து தலைமறைவாகிறான். அது தற்கொலை என்று காட்ட போலீசாரும், ஆளும் கட்சியினரும் முயல, அதில் சந்தேகப்படும் ஒரு நிருபர் துப்புத் துலக்க முனைப்பு காட்டுகிறான். மறைந்த ஒரு அரசியல் பெருந்தலைவரின் பேரனான அந்த நிருபர் அந்தத் துப்பறியும் வேலையோடு, தங்கள் குடும்பத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் அறிய முயல, அவனும் அரசியலுக்கு இழுக்கப்படுகிறான். பின் நடிகையின் தலைமறைவான காதலனும் கொல்லப்பட, அவன் இறப்பதற்கு முன் கொலையாளியாக யாரும் எதிர்பாராத ஒரு பெரும் புள்ளியைக் குற்றம் சாட்டி எழுதிய கடிதமும், வீடியோவும் வைரல் ஆகிறது. வழக்கும் பரபரப்பாக நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த நிருபரையும் கொல்ல முயற்சி நடக்கிறது. பின் என்னவெல்லாம் ஆகின்றன, அரசியல் சதுரங்கத்தில் எப்படியெல்லாம் காய்கள் தந்திரமாக நகர்த்தப்படுகின்றன என்பதை கடைசி வரை பரபரப்புடனும், விறுவிறுப்பு விலகாமலும் சொல்லி, சிந்திக்கவும் வைக்கும் நாவல் இது.  


நாவலை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/dp/8196319665