என்.கணேசன் எழுதியிருக்கும் இரண்டு புதிய நாவல்கள் பத்து தினங்களில் வெளியாகவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் நாவல் பெரிய நாவல் யோகி. இது ஒரு ஆன்மீக த்ரில்லர்.
இரண்டாவது நாவல் மாயப்பொன்மான். இது ஒரு சிறிய நாவல். அவரது வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசப்படும் ஒரு காதல் கதை!
இதனுடன், இது வரை மின்னூலாக மட்டுமே இருக்கும், கீதை காட்டும் பாதை நூலும் அச்சு நூலாகவும் வெளியாகவுள்ளது.
நூல்கள் வெளியானவுடன் மற்ற எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறோம்.
இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும், யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை. 17.05.2023 அன்று கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நன்றி ஐயா...
பதிலளிநீக்கு