எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் “மாயப் பொன்மான்” இன்று வெளியாகின்றது. என்.கணேசன் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் 216 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
கதைச்சுருக்கம்:
எழுத்திலும், வாழ்க்கையிலும்
சமரசம் செய்து கொள்ளாமல் உயர்ந்த இலட்சியங்களுடன் வாழும் ஒரு பெண் எழுத்தாளரின் காதலன்
திரைப்பட நடிகனான பின் தடம் மாறுகிறான். அவளுடைய அருமையான
நாவல் ஒன்று பிரபலமாகி திரைப்படமாக்கப்பட, அவளும்
திரையுலகில் நுழையும் சூழல் உருவாகிறது. அதன் பின் அவள்
சந்திக்கும் சவால்களை காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள், ஆசாபாசங்கள்
ஆகியவற்றை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல் இது. மாயக்கவர்ச்சிகள்
நிறைந்த திரையுலகில் உண்மைக் காதல் தாக்குப்பிடிக்குமா, இலட்சியங்களைத்
தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லும் இந்த நாவலைப்
படிக்கையில், கதாநாயகி மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் உங்கள் மனதில் நெருக்கமாகி விடுவார்கள்.!
விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக