வியாழன், 12 நவம்பர், 2026

புதிய நாவல் தந்திரம் 16.11.2026 அன்று வெளியீடு

 


எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் ”தந்திரம்” வரும் திங்களன்று (16.11.2026 )  வெளியாகின்றது.  572 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/-

நாவல் பற்றிய சுருக்கம்:

மருத்துவ நோபல் பரிசுக்கான குறும்பட்டியலில் ஒரு தென்னிந்திய விஞ்ஞானி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியான போது, ஒரு மூதாட்டிக்கு எழுந்த சந்தேகத்தின் விளைவாக, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அவரது மகனின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று தெரிய வருகிறது. உளவியல் ஆலோசகனான மூதாட்டியின் பேரன் அந்தக் கொலையை ஆராயப் போகையில் அந்த ஒரு கொலை மட்டுமல்லாமல், தொடர்ந்து பல கொலைகள் நடந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது. விஞ்ஞானியான அவன் தந்தையின் கண்டுபிடிப்பு திருடப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. கொலைகளுக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடிக்க பழைய வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படுகின்றன. அவன் தன் தந்தைக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசையும் பெற்றுத் தர தீவிரமாய் முயற்சி செய்கிறான். குடும்பப் பிரச்சினைகள், திகிலான நிகழ்வுகள், தந்திரமான எதிரிகள், கொலை கடத்தல் மிரட்டல்கள் ஆகியவற்றை எல்லாம் மீறி அவன் தன் முயற்சியில் வெற்றி பெறுகிறானா, மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகின்றனவா, அவை என்ன, என்பதை அறிய, விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த இந்த நாவலை வாங்கிப் படியுங்கள்.

நாவலைப் பதிப்பகத்தாரிடம் இருந்து வாங்க 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். 

தபால்/குரியர் மூலம் நாவலைப் பெற 700+60 = ₹760/- ஐ 9944554646 (Shubha G )எண்ணுக்கு  அனுப்பி பணம் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டுடன் 94863 09351 எண்ணுக்கு விலாசத்தையும் வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.

ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/dp/8197192049





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக