புதன், 27 ஆகஸ்ட், 2025

சாணக்கியன் நாவல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!

 



என்.கணேசனின்  சரித்திர நாவல் சாணக்கியன் (இருபாகங்கள்) வாசகர்களின் மகத்தான ஆதரவால் இன்று இரண்டாம் பதிப்பை சந்தித்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்!

இரண்டாம் பதிப்பில் இந்த நாவலின் விலை ரூ1100/- (முதல் பாகம் ரூ530/- இரண்டாம் பாகம் ரூ570/-

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

யோகி நாவல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!


 என்.கணேசனின் யோகி நாவல் குறுகிய காலத்தில் முதல் பதிப்பு நூல்கள் விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு இன்று  வெளியாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாம் பதிப்பின் விலை ரூ.820/-

பேராதரவு தந்து அதை வெற்றி நூலாக்கிய வாசகர்களுக்கு எங்கள் நன்றிகள்.



திங்கள், 18 ஆகஸ்ட், 2025

என்.கணேசனின் “சங்கீத மும்மூர்த்திகள்” நூல் இரண்டாம் பதிப்பு வெளியீடு!

 

எழுத்தாளர் என்.கணேசனின் சங்கீத மும்மூர்த்திகள் முதல் பதிப்பு முழுவதுமாக விற்று தீர்ந்து நீண்ட காலம் ஆயிற்று. இசையில் ஆர்வமுள்ள வாசகர்களும், அவருடைய எல்லா நூல்களையும் வாங்கி வைத்திருக்க விரும்பும் வாசகர்களும் தொடர்ந்து வேண்டிக் கொண்டதற்கு இணங்க இரண்டாம் பதிப்பு இன்று வெளியிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


நூலை வாங்க விரும்பும் வாசகர்கள் 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.


அமேசானில் ஆன்லைனில் வாங்க லிங்க் 

https://www.amazon.in/dp/8197192057



புதன், 23 ஜூலை, 2025

வியாழன், 3 ஜூலை, 2025

திங்கள், 2 ஜூன், 2025

என்.கணேசனின் புதிய நாவல் “கர்மா” வெளியீடு!

  


எழுத்தாளர் என்.கணேசனின் கர்மா நாவல் இன்று வெளியாகியுள்ளது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ₹800/-

நவீன் பாலாஜி  என்ற ஒரு இளம் தேசிய செஸ் சேம்பியனுக்கு ஒரு மனிதனின் மரணக் காட்சி கனவாக வருகிறதுஅது இயற்கை மரணம் அல்ல என்பதும் தெரிய வருகிறதுதொடர்ந்துவிழித்திருக்கையிலேயே அவன் மனத்திரையில் விரியும் சில காட்சிகள்அவை அவனுடைய முற்பிறவி நினைவுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பஅவன் யாரது என்றும்அந்தக் குடும்பத்தினரையும் கண்டுபிடிக்கிறான் குடும்பத்தினரில் யாரோ ஒருவரே கொலையாளி என்றும் தெரிய வரகொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறான்கொலையாளி நவீனுக்கு வரும் பூர்வீக நினைவுகளைத் தடுக்க ஒரு அமானுஷ்ய சக்தியை நாடகதைக் களம் சூடுபிடிக்கிறதுகொலையாளியைக் கண்டுபிடிக்க நவீன் எடுக்கும் துப்பறியும் முயற்சிகளும்கொலையாளி தந்திரமாக அதைத் தடுக்கும் முயற்சிகளும்அதை முறியடிக்க நவீன் எடுக்கும் முயற்சிகளும்குடும்பம்பாசம்காதல்அமானுஷ்யம்உளவியல்மறுபிறவி ஆகிய அம்சங்களுடன் மிக விறுவிறுப்பாகவும்சுவாரசியமாகவும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன.

நாவலை பதிப்பாளரிடமிருந்து நேரடியாக வாங்க 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

நாவலை அமேசானில் ஆன்லைனில்  வாங்க 




ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நேற்றைய (16.2.2025) தினமலரில் ரட்சகன் நாவலின் விமர்சனம்

 நேற்றைய (16.2.2025) தினமலர் கோவை, சென்னை, பெங்களூர் பதிப்புகளில் எங்கள் புதிய நாவல் ரட்சகனுக்கு வந்துள்ள விமர்சனம்





புதன், 18 டிசம்பர், 2024

இன்றைய (19.12.2024) தினமலர், மதுரைப் பதிப்பில் ரட்சகன் விமர்சனம்!

 இன்றைய (19.12.2024) தினமலர் மதுரைப் பதிப்பில் எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் ரட்சகனுக்கு விமர்சனம் வந்துள்ளது. 



செவ்வாய், 10 டிசம்பர், 2024

இன்றைய தினத்தந்தியில் ரட்சகன் விமர்சனம்!

இன்றைய (11.12.2024) தினத்தந்தியில் நாவலாசிரியர் என்.கணேசன் எழுதியுள்ள புதிய நாவல் ரட்சகனுக்கு விமர்சனம் வந்துள்ளது. 


திங்கள், 18 நவம்பர், 2024

என்.கணேசனின் புதிய நாவல் ரட்சகன் இன்று வெளியீடு!



எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் ரட்சகன் இன்று எங்கள் என்.கணேசன் புக்ஸ் பதிப்பில்  வெளியாகியிருக்கிறது. 616 பக்க நாவலின் விலை ரூ.700/-


கதைச்சுருக்கம்!

திகார் சிறையிலிருக்கும் ஒரு தூக்குதண்டனைக் கைதியான தீவிரவாதி, தான் தப்பிக்க, ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு முக்கியப் பிரமுகரை பாகிஸ்தானுக்குக் கடத்த ஏற்பாடு செய்து வெற்றி காண்கிறான். கடத்தப்பட்ட அந்த நபரையும் அவனையும் மாற்றிக் கொள்ள அவனுடைய இயக்கம் அரசுடன் ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இடையில் தூக்குதண்டனைக் கைதி தப்பிச் செல்கிறான். முக்கியப் பிரமுகரைக் காப்பாற்ற அமானுஷ்யனின் உதவியை அரசாங்கம் நாடுகிறது. இந்திய உளவுத்துறையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் இருபக்கங்களில் இருந்து கொண்டு மறைமுகமாகக் காய்களை நகர்த்த களம் சூடுபிடிக்கிறது. அமானுஷ்யன் பாகிஸ்தான் சென்று ஐஎஸ்ஐக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் எதிராக எப்படி சமாளிக்கிறான், தப்பிச் சென்ற தீவிரவாதி என்னவெல்லாம் செய்கிறான் என்ற பரபரப்பான நிகழ்வுகளை இந்த நாவல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது. குடும்பம், பாசம், காதல், அரசியல், மானுடம், தீவிரவாதம், சாகசம் ஆகிய இழைகளோடு அமானுஷ்யனின் அதிரடி சக்திகளின் சூட்சுமங்களையும் அறிய இந்த த்ரில்லர் நாவலைப் படியுங்கள்!



நூலை நேரடியாக பதிப்பாளரிடமிருந்து வாங்க 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 

இந்த நாவலையும் என்.கணேசனின் மற்ற நூல்களையும் ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 


வியாழன், 11 ஜூலை, 2024

தினமலரில் சதுரங்கம் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்!

 கடந்த ஞாயிறு (07.07.2024) அன்று சென்னைப் பதிப்பிலும், இன்றைய (11.07.2024) மதுரைப் பதிப்பிலும் சதுரங்கம் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம் - 




சனி, 4 மே, 2024

இன்றைய (5.5.2024) தினத்தந்தியில் சதுரங்கம் நாவல் விமர்சனம்

 இன்றைய (5.5.2024) தினத்தந்தியில் எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் சதுரங்கத்திற்கு வந்திருக்கும் விமர்சனம் இதோ -




புதன், 10 ஏப்ரல், 2024

இன்றைய தினமலரில் ’சதுரங்கம்’ நாவல் விமர்சனம்!

 இன்றைய (11.04.2024) தினமலர் மதுரை பதிப்பில் என்.கணேசனின்  “சதுரங்கம்” நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம் -



 

புதன், 13 மார்ச், 2024

என்.கணேசனின் புதிய நாவல் “சதுரங்கம்” வெளியீடு



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் ”சதுரங்கம்” இன்று அச்சில் வெளியாகியுள்ளது. 646 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.730.

இந்த நாவலின் கதைக்களம் அரசியல் சதுரங்கம். 

ஒரு பிரபல நடிகை கொலை செய்யப்பட, அவள் காதலன் தன் உயிருக்குப் பயந்து தலைமறைவாகிறான். அது தற்கொலை என்று காட்ட போலீசாரும், ஆளும் கட்சியினரும் முயல, அதில் சந்தேகப்படும் ஒரு நிருபர் துப்புத் துலக்க முனைப்பு காட்டுகிறான். மறைந்த ஒரு அரசியல் பெருந்தலைவரின் பேரனான அந்த நிருபர் அந்தத் துப்பறியும் வேலையோடு, தங்கள் குடும்பத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் அறிய முயல, அவனும் அரசியலுக்கு இழுக்கப்படுகிறான். பின் நடிகையின் தலைமறைவான காதலனும் கொல்லப்பட, அவன் இறப்பதற்கு முன் கொலையாளியாக யாரும் எதிர்பாராத ஒரு பெரும் புள்ளியைக் குற்றம் சாட்டி எழுதிய கடிதமும், வீடியோவும் வைரல் ஆகிறது. வழக்கும் பரபரப்பாக நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த நிருபரையும் கொல்ல முயற்சி நடக்கிறது. பின் என்னவெல்லாம் ஆகின்றன, அரசியல் சதுரங்கத்தில் எப்படியெல்லாம் காய்கள் தந்திரமாக நகர்த்தப்படுகின்றன என்பதை கடைசி வரை பரபரப்புடனும், விறுவிறுப்பு விலகாமலும் சொல்லி, சிந்திக்கவும் வைக்கும் நாவல் இது.  


நாவலை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/dp/8196319665



 

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரு ஆன்மீக நூல்கள்-மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மீகம்- மறுவெளியிடு!

எழுத்தாளர் என்.கணேசன் எழுதி தினத்தந்தியில் தொடராகவும், நூலாகவும் வெளிவந்த இரண்டு ஆன்மீக நூல்களின் மறுபதிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.

முதலாவது நூல் மகாசக்தி மனிதர்கள். இதன் மூன்றாம் பதிப்பை இன்று என்.கணேசன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.


இரண்டாவது நூல் அமானுஷ்ய ஆன்மீகம். இதன் இரண்டாம் பதிப்பை இன்று என்.கணேசன் புகஸ் வெளியிட்டுள்ளது. 


புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K