திங்கள், 11 ஏப்ரல், 2022

இங்கே நிம்மதி! நூல் ங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?” என்று தேடி அலைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்காய் பெருகி வருகிறது. நிம்மதிக்காக மனிதர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். பெருமளவு பொருள்களையும், சொத்துக்களையும் சேர்த்துப் பார்க்கிறார்கள், புகழ் பின்னால் ஓடி அதை அடைந்து பார்க்கிறார்கள், குடி, போதை, செக்ஸ் ஆகியவற்றை பல விதங்களில் அனுபவித்துப் பார்க்கிறார்கள், ஆன்மீகம், சாமியார்கள் என்றெல்லாம் அடைக்கலம் புகுந்தும் பார்க்கிறார்கள். இத்தனை செய்தும் நிம்மதி அவர்களுக்கு தொடுவான தூரத்திலேயே நின்று விடுகிறதே ஒழிய சென்று அடைய முடிகிற இலக்காகத் தெரியவில்லை.இந்த நிலையைப் போக்க குட்டிக் கதைகள் மூலமாகவும், உதாரணங்கள் மூலமாகவும் பல கோணங்களில் வாழ்க்கையையும், சூழ்நிலைகளையும், பிரச்னைகளையும் அலசி, யதார்த்த உண்மைகளை உணர்த்தி, பக்குவப்படுத்தி, ’இங்கே இருக்கிறது நிம்மதி’ என்று நிம்மதிக்கான வழிகளில் உங்கள் கையைப் பிடித்து இந்த நூலின் 42 கட்டுரைகள் உங்களை அழைத்துச் செல்லும்.

160 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் ஜனவரி 2015 ல் வெளியிடப்பட்டது. விலை ரூ.130/-

நிம்மதியில்லாத தருணங்களில் உங்களை அமைதிப்படுத்தவும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் இந்த நூல் உதவும்.  

முதல் பதிப்பு முற்றிலும் விற்றுத் தீர்ந்த நிலையில் இந்த நூல் அமேசான் கிண்டிலில் மின் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாங்கிப் படிக்க லிங்க் - https://www.amazon.com/gp/product/B0893HJYK8/


தினமலரில் இங்கே நிம்மதி குறித்து வந்துள்ள விமர்சனம்!


துக்ளக்கில் இங்கே நிம்மதி குறித்து வந்துள்ள விமர்சனம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக