இன்றைய (28.05.2023) தினகரன் நாளிதழில் யோகி நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்:
எழுத்தாளர் என்.கணேசன் எழுதியுள்ள அனைத்து நூல்களின் அனைத்து விவரங்களும், நூற்குறிப்புகளும், சில நாவல்களின் இலவச அத்தியாயங்களும் இங்குள்ளன.
சனி, 27 மே, 2023
வெள்ளி, 19 மே, 2023
என்.கணேசனின் ஐந்து நூல்களின் அடுத்த பதிப்புகள் வெளியீடு.
என்.கணேசனின் இரண்டு நாவல்களும், இரண்டு ஆழ்மனசக்தி நூல்களும், இங்கே நிம்மதி நூலும் வெற்றிகரமாக அடுத்த பதிப்பைக் கண்டுள்ளன.
இருவேறு உலகமும், யாரோ ஒருவன் நாவலும் இரண்டாம் பதிப்பு வந்துள்ளன.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் ஒன்பதாவது பதிப்பும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் இரண்டாவது பதிப்பும் வெளியாகியுள்ளன.
இங்கே நிம்மதி நூல் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)
Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)
வங்கிக் கணக்கு : N.Ganeshan Books
DBS (Former LVB) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
என்.கணேசனின் கீதை காட்டும் பாதை வெளியீடு!
இதுவரை கிண்டிலில் மின்னூலாக மட்டுமே இருந்து வந்த என்.கணேசனின் கீதை காட்டும் பாதை தற்போது அச்சு நூலாக என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/-
நூலுக்கு திரு. என்.கணேசன் எழுதிய முன்னுரை இதோ -
முன்னுரை
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்பட்டேன். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்க்கையில் அமைதி வேண்டுபவர்களுக்கும், மெய்ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கும் கீதை காட்டும் வழியை தேடல் உள்ள அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடையில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த நூல்.
கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.
காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.
இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்.
நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த நூல் படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.
வாருங்கள் கீதை காட்டும் பாதையில் பயணிப்போம் …
அன்புடன்
என்.கணேசன்
நூலை அமேசானில் ஆன்லைனில் வாங்கலாம். லிங்க் -
https://www.amazon.in/dp/8195612857?ref=myi_title_dp
அல்லது என்.கணேசன் புக்ஸிலிருந்து நேரடியாகவும் வாங்கலாம். தொடர்புக்கு அலைபேசி எண்.9486309351 மற்றும் மின்னஞ்சல் nganeshanbooks@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்.
புதன், 17 மே, 2023
என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” வெளியீடு!
எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” இன்று வெளியாகிறது. என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்ட இந்த நாவல் 718 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.800/-
கதைச் சுருக்கம்:
யோகாலயம் எனப்படும் பிரபல ஆசிரமத்தில் உள்ள ஒரு பெண் துறவியின் உயிருக்கு ஆபத்து என்று அப்பெண்ணின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் வர, அதிர்ச்சியுடன் அவளைக் காணச்செல்லும் அவளது தந்தைக்கு, ஆசிரம விதிகளைக் காரணம் காட்டி, காண அனுமதி மறுக்கப்படுவதில் ஆரம்பிக்கிறது நாவலின் கதைக்களம். பின்பு அடுத்தடுத்து நிகழும் கொலைகளுக்கும் காரணமோ, கொலையாளிகளோ கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க திறமை வாய்ந்த துப்பறியும் அதிகாரி ரகசியமாய் அங்கே துறவியாகப் போய்ச் சேர்கிறான். குற்றவாளிகளை மட்டுமல்லாமல் ஒரு உண்மையான யோகியையும் தேடும் தேடலும் தொடர்கிறது. மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆவிகளுடன் தொடர்பு, ஏவல் சக்தி, செய்வினை, போன்ற அமானுஷ்யங்களும் பிணைந்து, நட்பு, காதல், கர்மா, உண்மையான ஆன்மீகம் ஆகியவையும் அடையாளம் காட்டப்படுவது இந்த நாவலின் தனிச்சிறப்பு.
விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)
Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)
வங்கிக் கணக்கு : N.Ganeshan Books
DBS
(Former LVB) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
என்.கணேசனின் புதிய நாவல் மாயப்பொன்மான் வெளியீடு!
எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் “மாயப் பொன்மான்” இன்று வெளியாகின்றது. என்.கணேசன் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் 216 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
கதைச்சுருக்கம்:
எழுத்திலும், வாழ்க்கையிலும்
சமரசம் செய்து கொள்ளாமல் உயர்ந்த இலட்சியங்களுடன் வாழும் ஒரு பெண் எழுத்தாளரின் காதலன்
திரைப்பட நடிகனான பின் தடம் மாறுகிறான். அவளுடைய அருமையான
நாவல் ஒன்று பிரபலமாகி திரைப்படமாக்கப்பட, அவளும்
திரையுலகில் நுழையும் சூழல் உருவாகிறது. அதன் பின் அவள்
சந்திக்கும் சவால்களை காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள், ஆசாபாசங்கள்
ஆகியவற்றை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல் இது. மாயக்கவர்ச்சிகள்
நிறைந்த திரையுலகில் உண்மைக் காதல் தாக்குப்பிடிக்குமா, இலட்சியங்களைத்
தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லும் இந்த நாவலைப்
படிக்கையில், கதாநாயகி மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் உங்கள் மனதில் நெருக்கமாகி விடுவார்கள்.!
விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.