ஞாயிறு, 9 ஜனவரி, 2022

விதி எழுதும் விரல்கள்!


என்.கணேசன் எழுதிய நாவல்களில் மிகச்சிறிய நாவல் என்றாலும் விறுவிறுப்புக்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாத நாவல் இது.


கதைக்குறிப்பு:


திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனி மனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை சூழ்ச்சி, குடும்பம், பாசம், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் இந்த நாவல் படித்து முடித்த பின்னும் வாசகர் நினைவில் நிற்கும்.



வாசகர்களுக்காக ஒரு அத்தியாயம் இங்கே இலவசமாய் :

               1                    


வனைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குச் சுலபமாக இருக்கவில்லை. அந்த வேலை மூன்று திறமை வாய்ந்த துப்பறியும் நிறுவனங்களிடம் சரியாக ஐம்பத்தியோரு நாட்களுக்கு முன் தரப்பட்டிருந்தது. நேற்றிரவு பத்தரை மணிக்குத் தான்  அவன் இருக்கும் இடத்தை ஒரு துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துத் தெரிவித்தது. அரை மணி நேரத்தில் அவசர அவசரமாக அவர்கள் பத்து பேர் சென்னையிலிருந்து மூன்று கார்களில் கிளம்பி அதிவேகத்தில் வந்தும் இந்த ஊர் வந்து சேர, காலை ஒன்பது மணி ஆகி விட்டதுஅவர்கள் அவன் வசிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது தான் அவன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அவனுடைய அலுவலகம் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த டாக்சி வெளியே நின்று கொண்டிருந்தது. அந்த டாக்சியில் ஏற்கெனவே இரண்டு ஊழியர்கள் அமர்ந்திருந்தார்கள். வீதியில் ஆள்நடமாட்டமும் அதிகமிருந்தது. அதிகமாக யார் கவனத்தையும் கவராமல் அவனைப் பிடித்து அழைத்து வரும்படி அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அந்த நேரத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அவர்களுடைய மூன்று கார்களையும் வேறு வேறு இடங்களில் தூரத்திலேயே நிறுத்தி விட்டார்கள். அவன் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே அந்த டாக்சியில் ஏறிக் கொள்ள டாக்சி அங்கிருந்து கிளம்பியது.

 

வந்திருந்த பத்து பேர்களின் தலைவன் ஒரு காரில் உள்ளவர்களுக்குச் சைகை காட்ட அந்தக் கார் சிறிது இடைவெளி விட்டு அந்த டாக்சியைத் தொடர ஆரம்பித்தது. அவர்கள் பின் தொடர்வதை அவன் அறிவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் மிக நெருங்கி விடாமல் அதே நேரத்தில் அதிகம் பின் தங்கி விடாமல் தொடர்ந்த அந்தக் காரில் உள்ளவர்கள் அவன் எந்த நேரமும் டாக்சியை நிறுத்தி இறங்கி ஓடித் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவே எண்ணினார்கள். அவர்கள் பிடிக்க வந்த அந்த ஆள் சாதாரண மனிதன் அல்ல. ஜகதலப்பிரதாபன். எப்போது என்ன செய்வான் என்று யாராலும் சொல்ல முடியாது. அவனைத் தப்பிக்க விட்டால் அவர்கள் நிலைமை பரிதாபமாகி விடும். அதனால் கவனத்தை வேறெங்கும் சிதறாமல்  சர்வ ஜாக்கிரதையுடன் அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

அவன் ஒரு தடவை கூடப் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன் சகாக்களுடன் சுவாரசியமாக என்னவோ பேசிக் கொண்டிருந்தான். வழியில் வேறிரண்டு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஆறு கிலோமீட்டர் பயணித்த பின் அவன் வேலை செய்யும் நிறுவனம் முன்பு டாக்சி நின்றது. தொடர்ந்து காரில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே தங்கள் காரை நிறுத்திக் கொண்டார்கள்.

 

அவனும் அவன் சகாக்களும் இறங்கிப் பேசிக் கொண்டே நிறுவனத்தின் பெரிய கேட்டைத் தாண்டி உள்ளே சென்றார்கள். காரில் இருந்தவர்கள் அவன் மீது வைத்த கண்களை எடுக்கவில்லை. அவன் உள்ளே போன பிறகு காரில் இருந்தவர்களில் ஒருவன் தங்கள் தலைவனுக்குப் போன் செய்தான். ”இறங்கி உள்ளே போயிட்டான்

 

தலைவன் சொன்னான். “சரி வாசலையே கண்காணிச்சுட்டு இருங்கள். நாங்களும் வந்துடறோம்....”

 

ஒரு காரையும், மூன்று ஆட்களையும் அந்த வீட்டருகே காவலுக்கு நிறுத்தி விட்டு அவன் தன் காரில் இருந்த சகாக்களுடன் கிளம்பி அந்த நிறுவனத்திற்கு முன்னால் போய்ச் சேர்ந்தான். உள்ளே போகின்றவர், வருகின்றவர்களை மிகவும் கவனமாக அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவன் வெளியே வரவில்லை. அந்த நிறுவனத்திற்குள் ஊழியர்கள் உள்ளே போன பின்பு அதிகமாக மற்ற ஆட்கள் உள்ளே போகவில்லை. இரண்டு குரியர் ஆட்களும், ஒன்பது வேறு ஆட்களும் மட்டும் தான் உள்ளே போய் வந்தார்கள். நிறுவனத்தின் முகப்புச் சுவரில் ஜன்னல்கள் ஏதும் இல்லை. பக்கவாட்டுச் சுவர்களில் தான் ஜன்னல்கள் இருந்தன. அந்த ஜன்னல்கள் வழியாக எங்கிருந்து பார்த்தாலும் தெரியாதபடி தான் எச்சரிக்கையுடன் அவர்கள் காருடன் நின்றிருந்தார்கள். அவன் ஜன்னல் வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள வழியில்லை.

 

பெரும்பாலும் அவன் வேலை விட்டு வெளியே வருவதற்கு இரவு எட்டு மணி ஆகி விடும் என்று அந்தத் துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்துச் சொல்லி இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் அவன் வெளியே வருவதில்லை எனவும், நிறுவனத்தின் உள்ளேயே கேண்டீன் இருக்கிறது என்றும் அங்கேயே காலை, மதிய, இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு தான் கிளம்புவான் என்றும் கூடத் தெரிவித்திருந்தது. ஆனாலும் அவனை நம்ப முடியாது. அவர்கள் வந்திருப்பது தெரிந்தால் எப்படியாவது தப்பிச் செல்ல முயற்சி செய்வான்... செய்யக்கூடியவன் தான்.

 

இரவு ஏழரை மணியானவுடன் அவர்களில் தலைவன் காலையில் இன்னொரு காரில் முதலில் பின் தொடர்ந்தவர்களிடம்  சொன்னான். ”நீங்கள் போய் அவன் வீட்டைத் தாண்டி தெருக்கோடியில் காத்திருங்கள். காலையில் ஒருவேளை உங்கள் காரை அவன் கவனித்திருந்து திரும்பவும் அவன் கண்ணில் பட்டால் உஷாராகி விடுவான்.”

 

அந்தக் கார் அங்கிருந்து போய் பத்து நிமிடங்கள் கழித்து நிறுவன ஊழியர்களை அழைத்துப் போகும் டாக்சி வந்து சேர்ந்தது. அப்போது தான் காலையிலிருந்து அந்த வீட்டைக் கண்காணித்து வந்தவர்களில் ஒருவன் போன் செய்தான். “அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் காரன் வீட்டைக் காலி செய்கிறான் போல இருக்கு. ஒரு டிரான்ஸ்போர்ட் லாரி வந்து நின்னிருக்கு. நாலு கூலி ஆள்களும் வந்திருக்காங்க...”

 

அவர்களில் தலைவன் பெருமூச்சு விட்டான். அவர்கள் திட்டம் அவர்கள் தேடி வந்த ஆள் வீடு போய்ச் சேர்ந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கோழியை அமுக்குவது போல அமுக்கிக் காரில் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்பதாய் இருந்தது. தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் அவன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போவதற்குள் அதைச் செய்து முடிக்க நினைத்திருந்தார்கள். ஒருவேளை தெருவில் ஆட்கள் இருந்தால் பத்து மணி ஆகும் வரை காத்திருக்க எண்ணியிருந்தார்கள். அந்தத் தெரு பத்து மணிக்கு மேல் வெறிச்சோடிக் கிடக்கும் என்றும் பின் ஏதாவது ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் வந்து போய்க் கொண்டிருக்கும் என்றும் கூட அந்தத் துப்பறியும் தெரிவித்திருந்தது.    

 

இப்போது பக்கத்து வீடு காலியாகிறது என்றால் சாமான்களை எல்லாம் லாரியில் ஏற்றிமுடிக்க எவ்வளவு நேரமாகுமோ தெரியவில்லை. அவர்கள் இன்னும் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி வரலாம்....

 

தலைவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்தார்கள். இரண்டு பைக்குகள் முதலில் வெளியேறின. அவர்கள் யாருடனாவது அவன் பைக்கில் ஏறிப் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தலைவனும் அவன் ஆட்களும் சற்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்தால் அடையாளம் கண்டுபிடிப்பது சுலபமல்ல. அவர்கள் வந்திருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்திருந்தாலும் அவன் அப்படித் தப்பிப்பது தான் புத்திசாலித்தனமாய் இருக்கும்... நல்ல வேளையாக அப்படி எதுவும் ஆகாமல் அவனும் அவன் சகாக்களும் வெளியே வந்தார்கள். அப்போது மணி 8.07. சற்று பின்னால் காரை நிறுத்தி உள்ளே தயாராக அமர்ந்திருந்த அவர்கள் பக்கம் இப்போதும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. டாக்சி டிரைவரைப் பார்த்து எதோ சொல்லிக் கொண்டு வந்தவன் டாக்சியின் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டான். மற்ற ஊழியர்களும் ஏறிக் கொள்ள டாக்சி கிளம்பியது. அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

காலை வந்த வழியே டாக்சி போனது. ஏறிய இடத்திலேயே ஊழியர்கள் இறங்கினார்கள். இறங்கும் ஆள்அவன்அல்லவே என்று அவர்கள் கூர்மையாகக் கவனித்துத் திருப்தி அடைந்த பிறகே அவர்கள் அந்த இடங்களைக் கடந்தார்கள். அவன் அவர்கள் பின் தொடர்வதைச் சந்தேகிக்காதபடியே நல்ல இடைவெளி விட்டுத் தான் அவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

 

அவன் வீட்டை நெருங்கிய போது பக்கத்து வீட்டின் பெரிய பீரோவை எடுத்துக் கொண்டு கூலிகள் தெருவை மறித்தபடி வந்து கொண்டிருந்தார்கள். டாக்சி அதனால் சற்று முன்பே நின்றது. அவன் இறங்குவது தெரிந்தது. வீடு தாண்டி சிறிது தூரத்தில் அவர்களுடைய ஒரு காரும், தெருக்கோடியில் ஒரு காரும் ஆட்களுடன் நின்று கொண்டிருந்தாலும் கூட தலைவன் மெல்ல பதற்றத்தை உணர்ந்தான்.

....

தொடர்ந்து இதை அச்சிலோ, அமேசான் கிண்டிலிலோ நீங்கள் படிக்கலாம். ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் அக்டோபர் 2019 ல் வெளியான இந்த நாவலின் விலை ரூ.130/-  


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.                                             

                                                           

அமேசான் கிண்டிலில் படிக்க லிங்க்- 

https://www.amazon.com/dp/B07ZHMLFRX

சனி, 8 ஜனவரி, 2022

மகாசக்தி மனிதர்கள்!





என்.கணேசன் சித்தர்கள், யோகிகள், மகான்களின் அபூர்வசக்திகள் குறித்து தினத்தந்தியில் தொடராக அறுபது வாரங்கள் எழுதி வெளி வந்த  ”மகாசக்தி மனிதர்கள்” புத்தக வடிவிலும் தந்தி பதிப்பகத்தால் மே 2016ல் வெளியிடப்பட்டிருக்கிறது.    இந்த நூலில் சேர்த்திருக்கும் சம்பந்தப்பட்ட பல வண்ணப் புகைப்படங்கள் வாசகர்களுக்குச் சுவை கூட்டும் புதிய அனுபவமாக இருக்கும். இதன் இரண்டாம் பதிப்பு ஜனவரி 2017ல் வெளியானது. மூன்றாம் பதிப்பு செப்டம்பர் 2023ல் என்.கணேசன் புக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த நூல் குறித்து தினத்தந்தியில் 18.05.2016ல் வெளி வந்த விமர்சனம்

ன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே ‘மகாசக்தி மனிதர்கள்’ என்று போற்றுகிறோம். 

அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாக வெளி வந்துள்ளது. 

இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரைலைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார்.

மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. 

நன்றி: தினத்தந்தி 18.05.2016

இந்த நூல் குறித்து தினமலரில் 8.1.2017 அன்று வெளிவந்த விமர்சனம்


அபூர்வ சக்திகள் மற்றும் ஆன்மிக சித்தர்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தவறாமல் வாங்கிப் படியுங்கள்.

278 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.300/-

புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K




வியாழன், 6 ஜனவரி, 2022

ஆழ்மனதின் அற்புத சக்திகள்!

 


என்.கணேசனின் நூல்களிலேயே மிக அதிகமான பதிப்புகளைக் கண்ட மிகச் சிறந்த நூல் ஆழ்மனதின் அற்புத சக்திகள்! ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு ஜனவரி 2013, இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2013, மூன்றாம் பதிப்பு ஜனவரி 2014, நான்காம் பதிப்பு ஆகஸ்ட் 2014, ஐந்தாம் பதிப்பு ஜுலை 2015, ஆறாம் பதிப்பு ஜனவரி 2017, ஏழாம் பதிப்பு ஜனவரி 2018, எட்டாம் பதிப்பு செப்டம்பர் 2019 ல் வெளியாகியிருக்கின்றன. இப்போதும் இந்த நூல் பரபரப்பான விற்பனையில் தான் உள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு.


தமிழில் இது போன்ற நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் ஆழ்மனசக்தியை விளக்கும்படியான ஒரு நூல் இதுவரை வெளியானது இல்லை என்று சொல்லலாம். பிரபல ஆங்கில எழுத்தாளர் Joseph Murphy, Power of Subconscious Mind என்ற இதே தலைப்பில் வெற்றிகரமான ஒரு நூலை இதற்கு முன்பே எழுதியிருக்கிறார் என்ற போதிலும் அவருடைய நூலிலும் இத்தனை நவீன ஆராய்ச்சிகளின் விவரங்கள், விளக்கங்கள் இல்லை.  


இந்த நூல் குறித்து சிறப்பான நூல் விமர்சனங்கள் தினமலர், தினத்தந்தி, துக்ளக் , தினமணி ஆகியவற்றில் வந்திருக்கின்றன. 


பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள் சுயமுன்னேற்றம், வசியம், மனோதத்துவம் சார்ந்த நூல்கள் படிப்பதில் ஆர்வமில்லை என்று குறிப்பிடும் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் 10.11.2013 தினமணி நாளிதழில்  விமர்சனமாகத் தொடர்ந்து எழுதியுள்ளதாவது -

“அன்று ஏனோ வித்தியாசமான எண்ணம். மாறுதலுக்காக என்.கணேசன் என்பவர் எழுதிய “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்துப் படித்தேன். கோவையில் வங்கி ஒன்றில் பணிபுரிபவர் என்று அட்டை குறிப்பு சொன்னது. புரட்டிப் படிக்கப் படிக்க எத்தனை எத்தனையோ புதுப்புது செய்திகள், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள். நிஜமாகவே நான் வசமிழந்து விட்டேன்.

விபத்துக்களை முன்கூட்டியே அறிந்தவன், இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டிய ஆழ்மனசக்தி, மறுபிறவி நினைவுகள் உண்மையா?, நோய்களுக்கு எதிராக ஆழ்மனசக்தி ஆகிய கட்டுரைகள் எனக்கு புதியதொரு பார்வையை ஏற்படுத்தின.

ஒருமுறை படித்து விட்ட புத்தகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை படிக்க எடுத்து வைத்திருக்கிறேன். நான் முதலில் சொன்ன கருத்துக்களை இனிமேல் மாற்றிக் கொண்டாக வேண்டும். மொழிபெயர்ப்பு உள்பட!”



அதே போல 26-06-2013 தேதிய துக்ளக்கில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் குறித்து கீழ்கண்ட விமரிசனம் வந்துள்ளது 
”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள்மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு.
இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர்இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.
1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர்அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள்.
ஆவியுலகத் தகவல்கள்மறுபிறவிநினைவுகள்ஆழ்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள்ஆல்ஃபா அலைகள்யோகாதியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும்நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள்.
உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறதுமரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள்பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது.
-பரக்கத்”
எட்டாம் பதிப்பில் உள்ள ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் 272 பக்கங்களைக் கொண்டது. விலை ரூ.270/-


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

                                                 

(ஆழ்மனப் பயிற்சிகள் குறித்து என்.கணேசன் அவர்கள் யூட்யூபில் 32 வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் அதையும் கேட்டுப் பயனடையலாம். லிங்க்-


புதன், 5 ஜனவரி, 2022

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

 



என்.கணேசன் எழுதிய இந்த ஜோதிட நூல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பாளரால் 2013 செப்டம்பரில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 2014லும், மூன்றாம் பதிப்பு 2016 பிப்ரவரியிலும் வெளியிடப்பட்டது. 96 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.90/- 

இந்த நூல் மற்றெல்லா ஜோதிட நூல்களில் இருந்தும் தலைப்பில் மட்டும் அல்லாமல், உள்ளடக்கிய விஷயங்களிலும் வித்தியாசப்படுவது தான் இதன் தனிச்சிறப்பு. 

இதனுள்ளே என்.கணேசன் விளக்கி இருப்பவை இது தான் -

ஜோதிடத்தின் மூலமும், ஆராய்ந்தவர்களும்

ஜாதகம் நம் பூர்வ ஜென்மக் கணக்கு

கிரகங்கள், நட்சத்திரங்கள், தசாபுக்திகள் விளக்கம்

லக்னம், 12 வீடுகள் விளக்கம்

சில ஜோதிட சொற்றொடர்களுக்கு விளக்கம்

ஜாதக பலன்களை அறியும் முறை

யோகங்கள் விளக்கம்

சில அதிர்ஷ்ட ஜாதக உதாரணங்கள் (இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ்)

ஒரு துரதிர்ஷ்ட ஜாதக உதாரணம் (திப்பு சுல்தான்)

அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா? ஒரு வித்தியாச ஜாதகம் (ஹிட்லர்)

ஜாதகம் ஏன் எப்போது பார்க்க வேண்டும்?

ஜாதகம் எப்போது பார்க்கக்கூடாது?

மதியா விதியா? ஒரு நேர்மையான அலசல்

முழுமையான நல்ல, கெட்ட காலங்கள் உண்டா?

கோசாரம் முக்கியமா? தசாபுக்தி முக்கியமா?

நல்ல காலங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

கெட்ட காலங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

கற்கள், எண்கள், பூஜைகள் அதிர்ஷ்டம் தருமா?

கெட்ட காலங்களில் பரிகாரம் என்னென்ன?

ஒருவர் விதியை இன்னொருவர் விதி மாற்றுமா?

ஜோதிடர்கள் கூறும் பலன்கள் வேறுபடுவதேன்?

ஏமாற்று ஜோதிடர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

அரைகுறை ஜோதிட அறிவு அபாயமே!

விதிவழிப் பயணத்தில் மறக்கக்கூடாத உண்மைகள்!


இந்த நூலில் அலசப்பட்டிருக்கும் விஷயங்களில் பல எந்த ஜோதிடராலும் அதிகம் வெளிப்படையாகப் பேசப்படாதவை. எல்லா அம்சங்களும் பாரபட்சம் இல்லாத நேர்மையுடன் இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/9381098204



(அல்லது)


₹90+ தபால் செலவு ₹50 சேர்த்து N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். 


G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்                                            

 

 

திங்கள், 3 ஜனவரி, 2022

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்!

 


பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

என்.கணேசன் அவர்களின் பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 2012 ப்ளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு அக்டோபர் 2013லும், மூன்றாம் பதிப்பு அக்டோபர் 2014லும், நான்காம் பதிப்பு ஜுலை 2017லும் வெளியாகியுள்ளது. ஐந்தாம் பதிப்பு ஆகஸ்ட் 2023ல் வெளியாகியுள்ளது. 136 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.170/-

உள்ளே உள்ள சில அத்தியாயங்கள்

நள்ளிரவில் பிரமிடுக்குள்

உடலைப் பிரிந்து ஒரு பயணம்

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி

ஆவி பூதங்களை ஆட்கொண்ட மனிதன்

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும், முடியாததும்.

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை

ரகசிய தீட்சை- இரண்டாம் பிறப்பு

இறைவனின் மொழியும், இறந்தவர்கள் புத்தகமும்

கர்னாக் கோயிலின் இரகசியக் குறிப்புகள்

பாம்பு, தேள்களை வசியம் செய்தவர்

பாம்பு வசியத்தின் அபாயங்களும் சூட்சுமங்களும்

பால் ப்ரண்டன் கண்ட அதிசய மனிதர்

உலகத்திற்கு ஒரு எச்சரிக்கை


எகிப்தில் பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி பெற்ற சுவாரசிய அனுபவங்களையும், ஆன்மீக ஞானத்தையும், அபூர்வ சக்திகளின் சூட்சுமங்களையும் விளக்கும் இந்த அச்சு நூலையும், என்.கணேசனின் மற்ற நூல்களையும் ஆன்லைனில் அமேசானில்  வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8196319622


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

 

அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும் படிக்கலாம். லிங்க்

https://www.amazon.com/dp/B09TRQDD1D

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்!


 உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்!


என்.கணேசனின் இந்த நூல் மற்ற எல்லா நூல்களையும் விட மிக வித்தியாசமானது. அமேசான் கிண்டிலில் மட்டுமே பிரசுரிக்க அவர் உருவாக்கிய நூல், அதிகம் படிக்க ஆர்வமிருந்தும் கால அவகாசம் இல்லாதவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது. எப்படி என்று கேட்கிறீர்களா? அவரே அவரது முன்னுரையில் அதை விளக்குகிறார்:

”பலருக்கு நிறைய நல்ல நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான நேரமும், பொறுமையும்  இருப்பதில்லை. அதனாலேயே படிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஆனாலும் படிக்காத அந்த மனக்குறை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

அப்படியே படிக்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்தாலும் ஏராளமான நல்ல நூல்கள் இருக்கின்றன. எங்கிருந்து ஆரம்பிப்பது, குறுகிய காலத்தில் அதிகமாகப் படித்துப் பயன்பெறுவது எப்படி என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலைமையையும், அதற்கான தீர்வையும் ஒரு சமஸ்கிருத சுலோகம் அழகாகச் சொல்கிறது.                               

அனந்த சாஸ்திரம் பகுவேதிதவ்யம்

ஸ்வல்பஸ்ச காலோ பஹவஸ்ச விக்னா

யத் ஸார பூதம் ததுபாஸிதவ்யம்

ஹம்ஸோ யதா க்ஷீரம் இவாம் மிஸ்ரம்.


இதன் பொருள் இது தான்: எத்தனையோ சாஸ்திரங்கள் இருக்கின்றன. தெரிந்து கொள்ள வேண்டியவையோ அதிகம். நமக்கிருக்கும் காலமோ மிகக் குறுகியது. அதை அறிந்து கொள்ள இடையூறுகளோ அதிகம். ஆகையால் அன்னப்பறவை தண்ணீரில் கலந்த பாலை மாத்திரம் பருகுகிற மாதிரி நாமும் எது சாரமோ அதை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

வாசகர்களே, உங்களுக்காக அன்னப்பறவையின் வேலையை நான் இந்த நூலில் செய்திருக்கிறேன். பல நூல்களின் சாராம்சத்தை, சாராம்ச வார்த்தைகளை, சிந்திக்க வைக்கும் அருமையான கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். எந்த ஒரு தனி சாராம்சமும், கருத்தும், விளக்கமும் சேர்ந்து உங்களுக்குப் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

யோசிக்கவும், வழிகாட்டவும், உங்களை மெல்ல மாற்றவும் முடிந்த இந்த ஒவ்வொரு கருத்தையும் ஒரு நாளில் ஒன்று எனப் படிக்க ஆரம்பித்தால், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் படிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் படித்து முடித்தாலும் அந்த நாள் முழுவதும் நேரம் கிடைக்கையில் எல்லாம் படித்ததை அடிக்கடி சிந்தியுங்கள். மனதில் ஆழப்படுத்துங்கள். அந்த உண்மையை உங்கள் மனதில் அசைபோடுங்கள். அது பலவிதங்களில் உங்களை நல்லவிதமாக மாற்றிக் கொள்ளவும், உயரவும் உதவும்.

ஆதிசங்கரரிலிருந்து அடியேன் எழுதியது வரை, இந்த நாட்டு ஞானிகள் சொன்னதிலிருந்து மேலை நாட்டு ஞானிகள் சொன்னது வரை, திருக்குறளில் இருந்து உபநிடதம் சொன்னது வரை ஒரு மனிதனை சிந்திக்கவும், உயர்த்தவும், வெற்றி பெறவும், அமைதியடையவும் வைக்கும்படியான பல நூல்களின் உபதேச சாரங்கள்  ஐந்தைந்து நிமிடத் துளிகளில் படித்து முடிக்கும்படியாக இங்கே தந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து முடிக்கையில் பல நூல்களைப் படித்து முடித்த திருப்தியும், பயன்பாடும் தங்களுக்கு இருக்கும் என்பது உறுதி!”


நாம் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் பல முக்கியக் கேள்விகளுக்கு இந்த நூலில் மிகச்சரியான பதில்கள் இருக்கின்றன.   உதாரணத்திற்கு -

மனிதர்களிடம் நிறைய எதிர்பார்ப்பது சரியா

ஏன் எண்ணப்படியே எல்லாம் ஆவதில்லை

நாசமாக்கும் குணங்கள் எவை

ஏன் அன்பு செலுத்தியும் பலனிருப்பதில்லை

எப்படிச் செயல்புரிய வேண்டும்

நல்லவனுக்குக் காலமில்லையா    

வாழ்வில் உயிரோட்டம் இருக்கிறதா   

நம் தேவைகளில் அவசியமானவை எத்தனை   

அனைத்தையும் புனிதமாக்கும் வழி என்ன?    

விதி சோதிக்கும் போது ஜெயிப்பது எப்படி    

டென்ஷன் இல்லாமலிருக்க என்ன செய்ய வேண்டும்   

யோகம் எப்படிக் கைகூடும்   

ஆழ்மனசக்திகளுக்கு எதிரான மனநிலைகள் எவை  

உங்களையும் மீறித் தவறு செய்ய முடியுமா   

தடைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்   

தியானம் ஏன் முக்கியம் 

மன அமைதிக்கு என்ன வழி 

துன்பங்களின் மூலம் என்ன 

எண்ணியதை எண்ணியபடி முடிப்பது எப்படி 

கற்பனையைப் பயன்படுத்தி உயர்வதெப்படி  

நல்லது செய்தாலும் தவறாவது எப்போது

உலகம் உங்களை எடைபோடுவது எப்படி

தலைவனாக்கும் தன்மை எது?                   

குறையாத மகிழ்ச்சியின் ரகசியம் எது?

கெடப்போவதற்கு அறிகுறி என்ன?

விடைகளை அறியவும், ஐந்தைந்து நிமிடங்களில் அறிவுப் பொக்கிஷங்கள் பெறவும் இந்த நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள். 

நூலின் லிங்க் - https://www.amazon.in/dp/B08526TV7Q


சனி, 1 ஜனவரி, 2022

சங்கீத மும்மூர்த்திகள்!




சங்கீத மும்மூர்த்திகள்!


சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் இம்மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட இசைச்சக்கரவர்த்திகள்.  சமகாலத்தவர்களான இவர்கள் மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது இசை தவிர இவர்களுக்கிருக்கும் இன்னொரு ஒற்றுமை.

என்.கணேசன் அவர்கள் இந்த நூலில் மூவருடைய வாழ்க்கை வரலாற்றையும், இவர்களது அமரத்தன்மை வாய்ந்த பாடல்களுக்குப் பின்னணியாக இருந்த சுவாரசிய சம்பவங்களையும் இந்த நூலில் சிறப்பாக விவரித்துள்ளார்.

உதாரணமாக சியாமா சாஸ்திரி மதுரை மீனாட்சி அம்மனைத் தியானித்து நவரத்ன மாலிகை பாடியது, தியாகையர் நிதிசால சுகமா, முந்துவேனுக, சாந்தமு லேக சவுக்கியமுலேது ஆகிய பாடல்களைப் பாடியது, முத்துசாமி தீட்சிதர் தியாகராஜம் பஜே மற்றும் ஹிரண்மயிம் லஷ்மீம் பஜாமி பாடியது போன்றவற்றின் பின்னணிக்கதைகள் மிக சுவாரசியமானவை. 

அதே போல் இம்மூவரின் பாடல்களில் இருக்கும் தத்துவஞானமும் ஆன்மீக அன்பர்கள் அறிய வேண்டியது. இம்மூவர் வாழ்ந்த வீடுகளின் புகைப்படங்களும் இந்த நூலில் இருப்பது இன்னொரு சிறப்பு!

கர்நாடக சங்கீத இசையில் ஆர்வம் உள்ளவர்களும், ஆன்மீக அன்பர்களும்  படித்து ரசிக்க இந்த நூலில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. 
 
ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் ஆகஸ்ட் 2013 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 2025 ஆகஸ்டில் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது.  இந்த நூலின் விலை ரூ100/- 


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நூலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8197192057


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

  இந்த நூல் அமேசான் கிண்டிலிலும் வெளியாகியுள்ளது. லிங்க் -


 

தினமணியில் இந்த நூலிலிருந்து ஒரு சம்பவத்தை 16.2.2014 அன்று வெளியிட்டிருந்தார்கள். 




Attain Success & Retain Peace - English Book



என்.கணேசன் எழுதிய முதல் ஆங்கில நூல் Attain Success and Retain Peace . மனிதர்கள் வெற்றிக்கு நிறைய பாடுபடுகிறார்கள். பாடுபட்டு உழைத்து வெற்றி அடைந்தாலும் அவர்கள் அமைதியைத் தக்க வைத்துக் கொள்வது அபூர்வமாகவே நிகழ்கிறது. அமைதியாக வாழ முடிந்த நபர்களோ வெற்றியாளர்களாக இருப்பதில்லை. அவர்கள் பெரிய சாதனைகள் புரிவதும் அபூர்வமாகவே இருக்கிறது. வெற்றியும், அமைதியும் சேர்ந்து அடைவது எப்படி என்ற அரிய கலையை விளக்கமாகச் சொல்கிறது இந்த நூல். இந்த ஆங்கில நூல் அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும், அச்சு நூலாகவும் அக்டோபர் 2019ல் வெளியாகியுள்ளது. 

லிங்க் - https://www.amazon.com/dp/B07YSTBRCG

இந்த நூலில் வெற்றி, அமைதி, இரண்டையும் சேர்ந்து அடைவதற்கான பத்து விதிகளை ஆசிரியர் சிறப்பாக விவரித்துள்ளார். அவை

1. Recognize and honour your uniqueness

2. Have clear and well defined goals

3. Have positive thoughts and beliefs

4.  Come out of your comfort zone

5. Use the power of visualization

6. Be committed and disciplined

7. Manage your Time well

8. Never neglect health, family & friends

9. Trust your inner voice and signals

10. Do all you can and step back


இதனுடன் இந்தக் கலையில் வெற்றி பெற்றதன் அறிகுறிகள் அவர்கள்  குணாதிசயங்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றில் எப்படி வெளிப்படும் என்பதையும் Signs of Transformation என்ற தலைப்பில் விரிவாக ஆசிரியர் விவரித்துள்ளார்.


வெற்றியும், அமைதியும் சேர்ந்து பெற விரும்புபவர்களுக்கு இந்த ஆங்கில நூல் தெளிவாக வழிகாட்டும் என்பது உறுதி!